தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எப்போது? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

0
தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எப்போது? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எப்போது? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எப்போது? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடாத நபர்கள் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவும் வாய்ப்பிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியமாகும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதி இருந்து கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் தீவிரம் எடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் பரவ தொடங்கியது. குறிப்பாக அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடியது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது.அதன் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 இல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கைகளும் சற்று குறைந்தது. இதையடுத்து அரசுகள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு நாள் தொற்று பாதிப்பு 200 ஆக உயர்ந்து வருகிறது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போடாத நபர்கள் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்வது அவசியமாகும். BA4, BA5 பாதிக்கப்பட்டவர்கள் கூட தடுப்பூசி செலுத்தியுள்ளதால் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் எப்போதும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். 10 விழுக்காடு பாதிப்பு எந்த மாவட்டத்திலும் தற்போது இல்லை. பாதிப்பு அதிகமானால்தான் கட்டுப்பாடுகள் தேவையா என்பதை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அறிவிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!