EPFO ஊழியர்களுக்கு 8.5% வட்டி வரவு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
EPFO ஊழியர்களுக்கு 8.5% வட்டி வரவு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!!
EPFO ஊழியர்களுக்கு 8.5% வட்டி வரவு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!!
EPFO ஊழியர்களுக்கு 8.5% வட்டி வரவு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஊழியர்களின் EPFO கணக்கில் 2020-21ம் நிதியாண்டில் 8.5 சதவிகித வட்டி விரைவில் செலுத்தப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்கு தொழிலாளர் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பிஎஃப் வட்டித்தொகை:

நாடு முழுவதும் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்றினால் அவதிப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு ஊழியர்கள் பயனடையும் வகையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதன்படி கொரோனா காலத்தில் பாதிப்படையும் பிஎஃப் ஊழியர்கள் தங்களது இருப்பு தொகையில் இருந்து 3 மாத ஊதியத்தை முன்பணமாக பெறலாம் என்று தெரிவித்தது. இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

TN Job “FB  Group” Join Now

ssc

தற்போது இதனை தொடர்ந்து ஊழியர்களின் கணக்கில் 2020-21ம் நிதியாண்டில் 8.5 சதவிகித வட்டி விரைவில் செலுத்தப்படலாம் என்று அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தொழிலாளர் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த வட்டி பயனாளிகளின் கணக்கில் வருகின்ற ஜூலை மாத இறுதியில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டியினை 8.5 சதவிகிதத்தை மாற்றாமல் இருக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறப்பு – ஒரு நாளில் 50% மாணவர்கள் மட்டும் வருகை!!

இதுவே கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் சமூக பாதுகாப்பு அமைப்பு வழங்கிய மிக குறைந்த வட்டி வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்ததாவது, பிஎஃப் தொடர்ந்து 8.5% மேலான வருவாயை ஈட்டி வருகிறது. மேலும் கூட்டுத்தொகையும் பயனாளிகளின் ஆதாயங்களுக்கு தக்க வித்தியாசத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது வட்டி விகிதம் அளிப்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!