WhatsApp சேவை இன்று முதல் நிறுத்தம்? பிரைவசி பாலிசி விளைவு!

2
WhatsApp சேவை இன்று முதல் நிறுத்தம்? பிரைவசி பாலிசி விளைவு!
WhatsApp சேவை இன்று முதல் நிறுத்தம்? பிரைவசி பாலிசி விளைவு!
WhatsApp சேவை இன்று முதல் நிறுத்தம்? பிரைவசி பாலிசி விளைவு!

புதிய தனியுரிமை கொள்கையை Whatsapp நிறுவனம் மே 15 ஆம் தேதிக்குள் (இன்று) கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பயனர்களுக்கு தெரிவித்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பை நீக்கியுள்ளது.

WhatsApp அப்டேட்:

மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் செயலியான WhatsApp தனது வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி WhatsApp இன் புதிய தனியுரிமை கொள்கையை பயனாளர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த புதிய தனியுரிமை கொள்கையில் பயனர்களின் தரவுகளை வணிக ரீதியாக விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

அமேசானில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – ஆன்லைன் சேவைகள் விரிவாக்கம்!!

ஆனால் அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கு WhatsApp விளக்கம் அளித்தது. மேலும் பிப்ரவரி 8 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவித்திருந்தது. பின்னர் அதனை பயனர்களின் தெளிவின்மை காரணமாக மே 15 வரை நீடித்தது. இந்நிலையில் WhatsApp நிறுவனம் இன்று (மே 15) அந்த அறிவிப்பை நீக்கியுள்ளது. அதன்படி மே 15க்கு பிறகு Update செய்தவர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.

TN Job “FB  Group” Join Now

அதே போல update செய்யாதவர்களுக்கு தொடர்ச்சியான நினைவூட்டலை அந்த நிறுவனம் அனுப்பி வைக்கும். அவ்வாறு update செய்யாதவர்கள் சலுகைகள் படிப்படியாக குறைக்கப்படும். அந்த வகையில் வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்-ஐ இயக்க முடியாது. மேலும் வாட்ஸ்அப்பில் வரும் அழைப்புகளை ஏற்க முடியும். எனினும், நோட்டிபிகேஷன் அலெர்ட்களை க்ளிக் செய்த பின்பே குறுந்தகவல்களை படிக்க முடியும். சில வாரங்களுக்கு பின் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல்கள் நிறுத்தப்படும் என பிடிவாதமாக தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!