WhatsApp நிறுவனத்தின் சூப்பர் அப்டேட் – பயனர்களுக்கு கூடுதல் வசதி! தவறாமல் படிங்க!

0
WhatsApp நிறுவனத்தின் சூப்பர் அப்டேட் - பயனர்களுக்கு கூடுதல் வசதி! தவறாமல் படிங்க!
WhatsApp நிறுவனத்தின் சூப்பர் அப்டேட் - பயனர்களுக்கு கூடுதல் வசதி! தவறாமல் படிங்க!
WhatsApp நிறுவனத்தின் சூப்பர் அப்டேட் – பயனர்களுக்கு கூடுதல் வசதி! தவறாமல் படிங்க!

வாட்ஸ் அப்பில் டைமர் செட் செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளதாக WABetaInfo வலைதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்:

உலக மக்கள் அனைவராலும் வாட்ஸ்அப்பில் இலவச மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால், குரூப் சேட்டிங் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. தனியுரிமை கொள்கை கொள்கையை அகற்றி வணிகமாக்க முற்பட்டது. இதனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் UPI பேமெண்ட் சேவைகளை அறிமுகப்படுத்தி பணபரிவர்த்தனையை மேலும் எளிமையாக்கியுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவு!

வாட்ஸ்அப் சாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மறையும் வகையில் டைமர் செட் செய்து கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாட்ஸ் அப்பில் மேற்கொள்ளும் சாட்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் செய்யும் வசதி உள்ளது. ஒருவருக்கு அல்லது ஒரு குரூப்பில் தவறாக மெசேஜ் அனுப்பி விட்டதாக உணரும் போது, உடனடியாக அதனை டெலிட் செய்து விடலாம். இந்த வசதி மிக பயனுள்ளதாகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வருகிறது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

தனிப்பட்ட நபர்களின் சாட் பாக்ஸில் அனுப்பிய மெசேஜ் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும் என்பதை நாமே செட் செய்து அனுப்பி கொள்ள முடியும், நாட்கள் முடிந்தவுடன் அதன் பிறகு அந்த மெசேஜ் அழிந்து விடும். இப்போது ஒரு மெசேஜ் 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்கள் வரை சாட்பாக்சில் இருக்குமாறு செட்டிங்ஸ் ஆப்சன் உள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமே புதியதாக அறிமுகப்படுத்த உள்ள டைமர் ஆப்சன். WABetaInfo – வலைதளத்தின் தகவல்படி, iOS யூசர்கள் உபயோகப்படுத்தும் WhatsApp -களில் பீட்டா வெர்சனில் வாட்ஸ்அப் நிறுவனம் சோதித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!