Whatsapp : ஒரே நேரத்தில் உங்களின் Account 4 சாதனங்களில் இணைக்கலாம் – கலக்கலான அம்சம் அறிமுகம்!

0
Whatsapp : ஒரே நேரத்தில் உங்களின் Account 4 சாதனங்களில் இணைக்கலாம் - கலக்கலான அம்சம் அறிமுகம்!
Whatsapp : ஒரே நேரத்தில் உங்களின் Account 4 சாதனங்களில் இணைக்கலாம் - கலக்கலான அம்சம் அறிமுகம்!
Whatsapp : ஒரே நேரத்தில் உங்களின் Account 4 சாதனங்களில் இணைக்கலாம் – கலக்கலான அம்சம் அறிமுகம்!

தற்போது உங்களின் Whatsapp Account-ஐ ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இணைப்பதற்கான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய அம்சம்:

Whatsapp டெஸ்க்டாப் பயனாளர்களும் தற்போது தங்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள் உள்ளிட்ட பலருடன் Group video மற்றும் Voice calls செய்வதற்கான அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மற்றொரு அம்சத்தையும் கொண்டு வந்திருக்கிறது. இதில், Windows டெஸ்க்டாப் பயனர்களுக்கு புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மஞ்சள் மார்க்கெட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை – இதுதான் காரணம்!

இதுமட்டுமல்லாமல் Windows டெஸ்க்டாப் பயனாளர்கள் தற்போது, ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களுடன் தங்களின் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கலாம் என்ற புதுமையான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் கணக்கை 4 சாதனங்களுடன் இணைப்பதற்கான வழிமுறைகள்:
  • 1. இப்போது WhatsApp பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலில், Settings என்பதற்குள் சென்று, “Linked Devices” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 2. இதையடுத்து “Link a New Device” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் இணைக்க இருக்கும் Windows Desktop-ல் web.whatsapp.com என்ற WhatsApp Web-க்கான இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • 3. இதில் தோன்றும், QR code-ஐ Scan செய்தால் போதும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.
  • 4. இதே போன்று மற்ற 3 சாதனங்களில் இணைக்க, மேற்கண்ட 3 படிநிலைகளை திரும்ப செய்யவும்.
  • 5. இவ்வாறு 4 சாதனங்களுடன் இணைக்கப்பட்ட பிறகு உங்களின் மொபைல் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் Offline சென்றாலும், இந்த இணைக்கப்பட்ட சாதனங்களில் உங்களால் பயன்படுத்த முடியும். இதனால் மொபைல் போனிற்கு சார்ஜ் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது.
  • 6. மேலும் நீங்கள் 14 நாட்களுக்கு மேலாக மொபைலில் WhatsApp-ஐ பயன்படுத்தாமல் இருந்தால், WhatsApp கணக்கு இணைக்கப்பட்ட சாதனங்களில் WhatsApp Logout செய்யப்பட்டுவிடும். இது பயனாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!