ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஜாக்பாட் – இனி WhatsApp வாயிலாக சேவை!
இந்தியாவில் தற்போது மக்கள் அதிக அளவில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் வாட்ஸ் அப் மூலமும் மக்களை கவரும் வகையில் ஜியோமார்ட் வாட்ஸ் ஆப் மூலம் ஷாப்பிங் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
வாட்ஸ் ஆப்:
இந்தியாவில் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களையே பெற்று வருகின்றனர். ஏராளமான வலைத்தளங்கள் வந்து விட்டது. இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்தவாறே ஆர்டர் செய்து பெருகின்றனர். சமூக வலைதங்களில் ஆன்லைன் வியாபாரம் தலை தூக்கி உள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் வாயிலாவும் வர்த்தகத்தை தொடங்கும் நோக்கில் ஜியோ மார்ட் முயற்சித்து தற்போது ஜியோமார்ட் வாட்ஸ்அப்-ல் தனது மொத்த வர்த்தக தளத்தையும் கொண்டு வந்துள்ளது.
வங்கிகளில் ‘இதனை’ நாளை (செப்.01) செய்யாவிடில் கணக்கு முடக்கம் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. வர்த்தகப் பிரிவுகளின் தற்போதைய நிலை, எதிர்காலத் திட்டம், புதிய திட்டங்களின் அறிமுகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தின் போது ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள வாட்ஸ்அப் – ஜியோமார்ட் திட்டம் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜியோமார்ட் ஆப் இல்லாமலேயே வாட்ஸ்அப் வாயிலாகப் பொருட்களை பெறலாம். அதே நேரம் இந்த திட்டத்தால் வாட்ஸ் அப் நிறுவனத்தின் பேமெண்ட் சேவையும் விரிவடையும்.
வாட்ஸ் ஆப் வாயிலாக ஜியோ மார்ட் செயலி மூலம் ஆர்டர் செய்யும் முறைகள்:
- உங்கள் மொபைலில் முதலில் ஜியோமார்ட்-ன் எண்ணை +917977079770 சேமிக்க வேண்டும்.
- இந்த எண்ணுக்கு “HI” என்று என்ற குறுச்செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும்.
- பின்னர், “Get Started” என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதில் அடுத்து வரும் பக்கத்தில் “view Catalog” என்பதைக் கிளிக் செய்து பழங்கள் மற்றும் காய்கறிகள், பிற உணவு பொருட்கள், பிராண்ட் உணவுகள் மற்றும் பல போன்ற பல்வேறு வகையான பொருட்கள் திரையில் தோன்றும்.
- அதில் உங்களுக்கு தேவையான அனைத்து தயாரிப்புகளையும் சேர்த்து Send to Business” என்பதைக் கிளிக் செய்து உங்கள் முகவரியை உறுதிப்படுத்தி “Confirm” என்பதைக் கிளிக் செய்யவும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்