இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவைகள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!

0
இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவைகள் நிறுத்தம் - பயனர்கள் அதிர்ச்சி!
இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவைகள் நிறுத்தம் - பயனர்கள் அதிர்ச்சி!
இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவைகள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!

சமூக வலைத்தளங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருவது WhatsApp. அடிக்கடி அப்டேட் வழங்கி வரும் WhatsApp நிறுவனத்தின் சேவை குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் விரைவில் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

WhatsApp சேவைகள்:

WhatsApp குறித்து நாம் அறியாதது ஒன்றுமில்லை. இருந்தாலும் WhatsApp நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறியது குறிப்பிடத்தக்கது. WhatsApp மூலம் நாம் கருத்துக்களை பரிமாறுவது, புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்கள் என அனைத்தையும் பரிமாறி வருகின்றோம். இதனால் WhatsApp ஒரு தவிர்க்க முடியாத செயலியாக மாறியுள்ளது. அடிக்கடி அப்டேட்கள் வழங்கி வருவதாலும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்வதாலும் அனைவரின் மொபைல் போனிலும் WhatsApp நீங்கா இடம் பிடித்துள்ளது.

மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 28% உயர்வு – அரசு அறிவிப்பு!

சில நாட்களுக்கு முன் WhatsApp குரூப் வீடியோ காலில் 8 பேர் வரை இணையும் வசதியை அறிமுகம் செய்தது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று இந்த அப்டேட் வெற்றியும் கண்டது. இது போன்ற பல புதுமையான அப்டேட்களை வழங்கி வருவதில் WhatsApp நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது. தற்போது WhatsApp குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் செயல்படாது என தெரிவித்துள்ளது. அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் WhatsApp இயங்கி வருகிறது.

சென்னையில் கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம் – விநாயகர் சதுர்த்தி பண்டிகை!

இந்நிலையில் ஆண்ட்ராய்டு 4.0.3 இயங்கு தளத்திற்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐஓஎஸ் 9 இயங்கு தளத்திற்கு கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்கள் முதலியவற்றில் செப்.1ம் தேதி முதல் இயங்காது என WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்கால சேவைக்கு இந்த வகை போன்களில் தொழில்நுட்ப வசதி இல்லை. அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது எனவும் இந்த போன்களில், WhatsApp சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய கணக்கு செயல்படாது என்றும் அதேபோல் அந்த போன்களில் புதிய WhatsApp கணக்குகளை உருவாக்கவும் முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!