WhatsApp செயலியில் புதிய அப்டேட் – புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றும் வசதி!

0
WhatsApp செயலியில் புதிய அப்டேட் - புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றும் வசதி!
WhatsApp செயலியில் புதிய அப்டேட் - புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றும் வசதி!
WhatsApp செயலியில் புதிய அப்டேட் – புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றும் வசதி!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல அம்சங்களையும் புதிதாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்:

வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவையாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்ஆப்பில் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

T20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்!

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது டெஸ்க்டாப் பயன்பாட்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி விரைவில் ஒரு புதிய அம்சம் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்ற முடியும். அதாவது, வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை பதிவேற்றும் போது, ஒரு புதிய ஐகான் இருக்கும். அதை தேர்வு செய்து அந்த புகைப்படத்தை ஸ்டிக்கராக மாற்றிக் கொள்ளலாம். இந்த அம்சத்திற்கான பணிகள் தற்போது ஆய்வில் உள்ளது.

திருப்பூரில் செப்.18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த புதிய அம்சம் 2.2137.3 டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் விரைவில் கிடைக்கும். இந்த அம்சங்கள் முன்னதாக நடைமுறையில் உள்ள போதும், அதற்காக வேறு ஒரு செயலியின் உதவி தேவைப்படும். மேலும், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் இந்த அம்சம் கிடைக்கவில்லை. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மாதம் பீட்டா வாட்ஸ்அப் அம்சத்தை கணினி பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்து, இந்த திட்டம் வெற்றியடைந்துள்ளது. பீட்டா பதிப்பு விண்டோஸ் மற்றும் macOS பயனர்களுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!