WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – My Contacts Except விரைவில் அறிமுகம்!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - My Contacts Except விரைவில் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - My Contacts Except விரைவில் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – My Contacts Except விரைவில் அறிமுகம்!

வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளது. இதன் மூலம் நமது வாட்ஸ் ஆப் புரோப்பைல் போட்டோ மற்றும் டேட்டஸ் போன்றவற்றை யார் பாக்க வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்யலாம். இந்த புதிய அப்டேட் குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்:

உலகளவில் அதிக மக்களால் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெசேஜ் செய்வதற்கு எண்ணற்ற செயலிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை பெற்ற ஒரு செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. அண்மையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தனியுரிமை கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளில் சில மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த புதிய அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் டெலிகிராம் செயலியை நோக்கி சென்றனர். இந்த நிலையில் வாட்ஸ்அப் தனது பயனர்களை ஈர்க்கும் வண்ணம் அவ்வபோது புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அரசு பள்ளிகளுக்கு 2022ம் ஆண்டில் 113 நாட்கள் விடுமுறை – கல்வி காலண்டர் வெளியீடு!

அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப் சாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் மறையும் வகையில் டைமர் செட் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் கணக்கை உங்களை தவிர வேறு யாரும் திறக்காத வண்ணம் வாட்ஸ் அப்பை லாக் கொண்டு வரப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக ம் வாட்ஸ்அப் வெப் மூலம் கணினி உட்பட பிற சாதனங்களில் மூலம் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக வாட்ஸ்அப் நமது புரோப்பைல் போட்டோ, ஸ்டேட்டஸ் போன்றவற்றை யார் பாக்க வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்யும் ஆப்ஷன் வரவுள்ளது.

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மதிப்பூதிய அடிப்படையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷன் 2.2149.1-வில் யார் நமது ப்ரொபைல் போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய My Contacts Except என்ற ஆப்சன் வரவுள்ளது. இது குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புது அப்டேட் வாட்ஸ் அப்பை கணினியில் பயன்படுத்துவோருக்கு தற்போது வரவுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!