WhatsApp தகவல்கள் Facebook உடன் பகிரப்படாது – நீதிமன்றத்தில் உறுதி!
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு செய்தி பரிமாற்றம் செய்யும் செயலி வாட்ஸ்ஆப், தனது பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம்:
WhatsApp தனது பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி WhatsApp பயனாளர்களின் தகவல்களை வணிக ரீதியாக மற்ற செயலிகளுக்கு பரிமாற்றப்படும் என தனியுரிமை கொள்கையை தெரிவித்தது. அந்த கொள்கையை பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தது. ஆனால் அது குறித்து போதிய தெளிவு இல்லாத காரணத்தினால் அந்த அறிவிப்பை மே 15 ஆம் தேதி அன்று ஒத்தி வைத்தது.
Airtel, BSNL, Jio & Vi ரூ.250க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விளக்கம்!
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் படி, பயனர்களின் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்படி வாட்ஸ் அப் நிறுவனம் தகவல் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு இந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. பயனர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது என உறுதி அளித்துள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.