இரண்டு ஸ்மார்ட்போன், ஆனால் ஒரே WhatsApp – சூப்பர் அப்டேட்! பயனர்கள் கவனத்திற்கு!

0
இரண்டு ஸ்மார்ட்போன், ஆனால் ஒரே WhatsApp - சூப்பர் அப்டேட்! பயனர்கள் கவனத்திற்கு!
இரண்டு ஸ்மார்ட்போன், ஆனால் ஒரே WhatsApp - சூப்பர் அப்டேட்! பயனர்கள் கவனத்திற்கு!
இரண்டு ஸ்மார்ட்போன், ஆனால் ஒரே WhatsApp – சூப்பர் அப்டேட்! பயனர்கள் கவனத்திற்கு!

WhatsApp நிறுவனம் அடுத்ததாக ஒரே அக்கவுண்ட்டை இரண்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அப்டேட் ஒன்றை வழங்கவுள்ளதாக கூறியுள்ளது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

WhatsApp அப்டேட்:

உலகம் முழுவதும் தனக்கென பயனர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வரும் நிறுவனம் WhatsApp. இந்த நிறுவனம் தங்களது பயனர்களுக்கென அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. தகவல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் WhatsApp நிறுவனம் போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் செய்யும் வசதி முதலியனவற்றை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து 2 ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த அப்டேட் ஆனது பீட்டா வெர்சனில் வெளியாகி அதன்பின் அனைவருக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது WhatsApp செயலியை பீட்டா வெர்ஷனில் மல்டி டிவைஸ் பயன்படுத்தும் முறை அமலில் உள்ளது. டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற 4 இடங்களிலும், ஒரு ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த முடியும். ஆனால் 2 ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – நேரடி நியமன பணிகளுக்கு வயது வரம்பு!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனுக்கு இந்த அப்டேட் தற்போது தயாராகி வருவதாகவும் முதலில் பீட்டா வெர்ஷனுக்கும், அதற்கு பின் அனைவருக்கும் இது அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக WhatsApp Payment முறையை அறிமுகம் செய்தது. இந்த அம்சமானது அனைவராலும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியதாக கூறப்பட்டு வந்த நிலையில் பேமெண்ட் அம்சத்தில் ஒரு புதிய சேவையை நிறுவனம் இப்போது சோதனை செய்வதாக கூறியுள்ளது. அடுத்தடுத்து வழங்கி வரும் அப்டேட்களால் பயனர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!