SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வாட்ஸ் ஆப் மூலம் வங்கிசேவை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - வாட்ஸ் ஆப் மூலம் வங்கிசேவை!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வாட்ஸ் ஆப் மூலம் வங்கிசேவை!

நாடு முழுவதும் அனைத்து வகையான சேவைகளும் ஆன்லைன் முறையில் மக்களுக்கு வழங்கி வரும் நிலையில், தற்போது வாங்கி சேவைகளும் அதில் முதன்மையானதாக உள்ளது. தற்போது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியானது தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எளிய வழியில் சேவைகள்:

இணையத்தின் பயன்பாடு அதிகமாக தொடங்கியது முதல் அனைத்து வகையான சேவைகளும் ஆன்லைன் வழியில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அப்போது கூட மக்கள் இந்த சேவைகளை அதிக அளவில் பய்னபடுத்தவில்லை. குறிப்பாக, கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது தான் மக்கள் அதிக அளவில் இணையவழி சேவைகளை அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.

சென்னையில் நாளை மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதிலும், நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, ஒரு படி மேலே சென்று தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வங்கி சேவையை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. முன்னதாக, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, யெஸ் வங்கி ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, ஆக்ஸிஸ் மற்றும் ஐடிஎஃப்சி போன்ற வங்கிகள் இந்த வாட்ஸ்ஆப் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தனர். தற்போது அந்த வரிசையில் எஸ்.பி.ஐ வங்கி இணைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதிலும், வாட்ஸ்ஆப் மூலம் பாதுகாப்பான முறையில் பணபரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். குறிப்பாம, இந்த வாட்ஸ்ஆப் வழி சேவையானது கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் கனெக்ட் என்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதன் மூலம் பணம் இருப்பு குறித்த விவரம், ரிவார்டு பாய்ண்ட்ஸ், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட பணபரிவர்த்தனை குறித்த விவரங்கள் போன்ற தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த சேவையை பெறுவதற்கு, வாட்ஸ் அப் எண்ணிலிருந்து ‘OPTIN’ என டைப் செய்து 9004022022 எண்ணிற்கு sms அல்லது 08080945040 எண்ணிற்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!