WhatsApp பேக்கப் செய்வதில் கட்டுப்பாடு – 15 ஜிபி வரை மட்டுமே இலவசம்!
உலக அளவில் கோடி கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் பேக்கப் செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை இப்பதிவில் விரிவாக காண்போம்.
வாட்ஸ்அப் பேக்அப்:
உலக அளவில் அதிக நபர்களால் பயன்படுத்தும் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் அண்மை காலமாக புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் அன்லிமிடெட் பேக்கப் செய்வது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் பேக்கப் செய்வதற்கு தற்போது கூகுள் நிறுவனம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு வேண்டுமானாலும் அன்லிமிட்டாக பேக்கப் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் இனி கூகுளின் ஒவ்வொரு கணக்கிற்கும் 15 ஜிபி மட்டுமே இலவசமாக பேக்கப் செய்ய முடியும்.
விவசாய கடன் அட்டை இன்னும் பெறவில்லையா? – உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!
ஒருவேளை 15 ஜிபிக்கு அதிகமாக இருந்தால் உங்களது மொபைல் போனில் தேவையில்லாத பைல்களை டெலிட் செய்ய நேரிடும். இந்த புதிய முறை டிசம்பர் மாதம் முதல் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு வரும் எனவும் அதன் பிறகு அனைத்து ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களுக்கும் அமல்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.