Whatsapp Update.. வரவுள்ள டிஜிட்டல் அவதார் அம்சம் – இனி Chatting ஜாலி தான்!

0
Whatsapp Update.. வரவுள்ள டிஜிட்டல் அவதார் அம்சம் - இனி Chatting ஜாலி தான்!
Whatsapp Update.. வரவுள்ள டிஜிட்டல் அவதார் அம்சம் - இனி Chatting ஜாலி தான்!
Whatsapp Update.. வரவுள்ள டிஜிட்டல் அவதார் அம்சம் – இனி Chatting ஜாலி தான்!

வாட்ஸ் அப் நிறுவனம் தினந்தோறும் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் டிஜிட்டல் அவதார் அம்சத்தை கொண்டு வர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் உலகளவில் சிறந்த தகவல் பரிமாற்ற செயலியாக விளங்கி வருகிறது. மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் குரூப்பில் 1,024 பேர் இணையும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவதார் ஸ்டிக்கர் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அம்சம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் சேட்களில் எளிதாக அவதார் ஸ்டிக்கர்களை அனுப்பலாம். இதனை பெற வாட்ஸ் அப்பில் எமோஜி ஆப்ஷனுக்கு சென்று அவதார் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அவதாரை நீங்களே உருவாக்கலாம். தற்போது இந்த அவதாரில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டது.

தமிழக ஊரக திறனாய்வு தேர்வு டிச.17 க்கு தள்ளிவைப்பு – மாண்டஸ் புயல் நெருங்கும் அபாயம்!

Exams Daily Mobile App Download

அதாவது டிஜிட்டல் அவதார்களை உருவாக்கும் அம்சத்தை whatsapp அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மார்க் ஜூக்கர் பெர்க் இந்த டிஜிட்டல் அவதாரில் பல விதமான ஹேர் ஸ்டைல், முகம் மற்றும் ஆடை உருவாக்கம் போன்ற அம்சங்கள் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அவதார்களை உருவாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!