Whats App இல் மறைந்திருக்கும் அம்சங்கள் – தவறாமல் படிங்க!

0
Whats App இல் மறைந்திருக்கும் அம்சங்கள் - தவறாமல் படிங்க!
Whats App இல் மறைந்திருக்கும் அம்சங்கள் - தவறாமல் படிங்க!
Whats App இல் மறைந்திருக்கும் அம்சங்கள் – தவறாமல் படிங்க!

நாம் அனைவரும் தினசரி வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வந்தாலும் அதில் சில அம்சங்கள் நாம் அறியாத வகையில் மறைந்து உள்ளன. தற்போது அதனை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்:

நாட்டு மக்கள் மத்தியில் இன்றியமையா இடத்தை பெற்று வருகிறது வாட்ஸ் அப். பயனர்கள் அனைவரும் இந்த செயலியில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர். பல வருடங்கள் இந்த செயலியை வாட்ஸ் அப் பயனர்கள் பயன்படுத்தி இருந்தாலும் இன்னும் அவர்களுக்கு தெரியாத சில அம்சங்கள் வாட்ஸ் அப்பில் மறைந்து இருக்கிறது. தற்போது அது என்னென்ன அம்சங்கள் என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அம்சங்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Whats App வழி தகவல்!

அதன்படி ஒரு வார்தையின் தொடக்கம் மற்றும் முடிவில் * * இந்த குறியீட்டை பயன்படுத்தினால் வார்த்தை போல்டாக மாறிவிடும். அதேபோல் வார்த்தைக்கு முன் மற்றும் பின்பக்கத்தில் _ _ இந்த குறியீட்டை பயன்படுத்தினால் வார்த்தை இத்தாலிக் ஃபாண்டாக மாறிவிடும். மேலும் வாட்ஸ் அப்பில் நமக்கு வரும் போட்டோ, வீடியோ ஆகியவை தானாக பதிவிறக்கம் ஆகி போனில் இடத்தை அடைத்து வருகிறது. தற்போது இதனை தடுக்க Settings-Chats-Save to camera roll என்னும் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.

இதையடுத்து நீங்கள் மொபைல் பயன்படுத்தும் போது வாட்ஸ் அப்பில் இருந்து தொடர்ந்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்து இடையூறு செய்தால் அதை Settings-Accounts-privacy-Enable fingerprint lock-show content in notification-Disable செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நோட்டிபிகேஷன் தொந்தரவு இருக்காது. மேலும் குறிப்பிட்ட சில நபர்களின் மெசேஜ் மட்டும் பார்க்க வேண்டும் என்றால் அவர்களுடன் Profile க்கு சென்று அவரது பெயரை கிளிக் செய்து அதில் உள்ள custom notification-select-popup என்னும் ஆப்ஷனுக்கு சென்று Always Show Popup என்று மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழங்கும் முறை – அரசுக்கு பரிந்துரை!

அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட நபர்களின் மெசேஜ் மட்டும் பாப் அப் ஆகும். இதையடுத்து சில நேரங்களில் நம் அனுமதியின்றி பலர் நம்மை குழுக்களில் சேர்த்து வருவர். இதை நிறுத்த வேண்டும் என்றால் Settings-Account-Privacy-Group என ஆப்ஷனுக்கு சென்று அதில் மூன்றாவதாக உள்ள My Contacts Except என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு பின் பயனர்கள் பிறருக்கு வாய்ஸ் மெசேஜ் செய்யும் போது அதை சரிபார்க்க வேண்டும் என்றால் வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்யும் போது மைக் ஆப்ஷனுக்கு மேல் உள்ள லாக் ஆப்ஷனை நோக்கி இழுத்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்க பதிவு செய்த வாய்ஸ் மெசேஜ் பிறருக்கு செல்லாது. நீங்கள் அதை சரி பார்த்து கொண்டு பின்பு அனுப்பலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!