PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Whats App வழி தகவல்!

0
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Whats App வழி தகவல்!
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Whats App வழி தகவல்!
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Whats App வழி தகவல்!

PF சந்தாதாரர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கும் வகையில் EPFO பல்வேறு சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் மூலமாக PF சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் சேவைகள்

முன்பெல்லாம் PF சேவைகளை பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்கள் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது இந்த சேவைகள் ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் PF சந்தாதாரர்கள், வாட்ஸ் அப் வழியாகவும் இந்த சேவைகளை தற்போது பெற்றுக்கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிப்பட்ட வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்கள் EPFOவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வாட்ஸ் அப் எண்களை தெரிந்து கொள்ள https://www.epfindia.gov.in/site_ en/index.php இணையத்தளத்தை உபயோகிக்கலாம்.

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழங்கும் முறை – அரசுக்கு பரிந்துரை!

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் எண்ணை உங்கள் மொபைலில் பதிவு செய்து அந்த எண் மூலம் உங்களது குறைகளை கேட்டறிந்து தீர்வு காணலாம். இந்த வாட்ஸ் அப் குறைதீர்க்கும் சேவையானது PF அமைப்பில் உள்ள 138 பகுதிகளிலும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாட்ஸ் அப் சேவைகளுக்கு PF பயனர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள PF பயனர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி நன்மைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதன் படி,

  • அம்பத்தூர் – 6380131921
  • வடக்கு சென்னை – 9345750916
  • தெற்கு சென்னை – 6380366729
  • தாம்பரம் – 6380153667
  • கோவை – 9994255012
  • மதுரை – 9489938487
  • நாகர்கோவில் – 6381122366
  • சேலம் – 9080433650
  • திருநெல்வேலி – 9489987157
  • திருச்சி – 6380109286
  • வேலூர் – 7397593330

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!