WhatsApp பயனர்களுக்கான நியூ அப்டேட்.. இனி Chat-களை எளிதாக தேடலாம்!

0
WhatsApp பயனர்களுக்கான நியூ அப்டேட்.. இனி Chat-களை எளிதாக தேடலாம்!
WhatsApp பயனர்களுக்கான நியூ அப்டேட்.. இனி Chat-களை எளிதாக தேடலாம்!
WhatsApp பயனர்களுக்கான நியூ அப்டேட்.. இனி Chat-களை எளிதாக தேடலாம்!

உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் பல விதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் குரூப்பில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மெசேஜ்களை எளிதாக கண்டுபிடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்:

இன்றைக்கு வாட்ஸ் அப் செயலி தனிப்பட்ட முறையிலும் வணிக ரீதியாகவும் அனைவருக்கும் அதிகம் பயன்பட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் அப் செயலியை நம்பி பல சிறு குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு உதவும் வகையில் அவ்வவ்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் அண்மையில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து கொள்ளும் அம்சம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மெசேஜ் மட்டுமல்ல ஆடியோ, வீடியோ போன்றவைகளையும் அனுப்பலாம். “வாட்ஸ் அப் மெசேஜ் யுவர் செல்ப்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்த வசதியை பெறலாம். தற்போது வாட்ஸ் அப், குரூப்களுக்கான அப்டேட்டுகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு 2023: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் அண்மையில் வாட்ஸ் அப் குழுக்களில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தேதி வாரியாக வாட்ஸ் அப் மெஜேஜ்களை தேடும் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதி பீட்டா வாட்ஸ் அப் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!