WhatsApp குரூப் காலில் இடையில் சேர்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
WhatsApp குரூப் காலில் இடையில் சேர்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp குரூப் காலில் இடையில் சேர்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp குரூப் காலில் இடையில் சேர்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் WhatsApp முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது குரூப் சேட் செய்யும் வசதியில் கொண்டுவரப்பட்ட புதிய அம்சம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன,

குரூப் சேட்:

உலகம் முழுவதும் மொபைல் போன் அத்தியாவசிய தேவையாக மாறி உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் WhatsApp பயனராக உள்ளனர். பயனர்கள் அனைவரும் WhatsApp பயன்படுத்தி சாட் செய்வது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். எனவே WhatsApp நிறுவனம் அவ்வப்போது பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குரூப் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவு, ஆன்சர் கீ & டை பிரேக்கிங் கணக்கீடு விவரங்கள் இதோ!

தற்போது இதில் பல்வேறு சிறப்பம்சங்களை இணைத்துள்ளது. தற்போது உங்கள் குரூப்பில் யாராவது உங்களை அழைக்கும் போது அந்த அழைப்பைத் தவறவிட்டால் அவர்கள் விரும்பும் போதெல்லாம் சேரலாம் எனும் அம்சத்தை வழங்கி வருகிறது. மேலும் எப்போது வேண்டுமானாலும் விலகும் அம்சமும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் எளிய முறையில் சேட் டேபிள் மூலம் பயனர்கள் WhatsApp குரூப் காலில் இணையலாம் மற்றும் விலகலாம்.

ஆன்லைன் வாயிலாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

பயனர்களின் திரையின் அழைப்பில் தொடர்பு கொண்டவர் மற்றும் அழைக்கப்பட்டவர் முதலிய அனைத்து விவரங்களும் இதில் காணப்படும். அதில் புறக்கணி என்பதை கிளிக் செய்வதன் மூலம் இணைப்பில் சேராமல் தவிர்க்க முடியும். தற்போது வெளியாகியுள்ள புதிய அம்சத்தின்படி WhatsApp குரூப் சேட்டில் இருந்து நேரடியாக வெளியேறிய பட்சத்தில் நேரடியாக அழைப்பில் சேரும் ஆப்ஷன் இதில் வழங்கப்பட்டிருக்கும். அதில் உள்ள சேர் என்னும் பொத்தானை அழுத்துவதன் மூலம் பயனர்கள் மீண்டும் அந்த காலில் இணைய முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!