வெண்பாவின் குழந்தைக்கு அப்பாவாக போகும் பாரதி – ஷர்மிளா எடுக்க போகும் முடிவு என்ன? சீரியலில் புதிய திருப்பம்!

0
வெண்பாவின் குழந்தைக்கு அப்பாவாக போகும் பாரதி - ஷர்மிளா எடுக்க போகும் முடிவு என்ன? சீரியலில் புதிய திருப்பம்!
வெண்பாவின் குழந்தைக்கு அப்பாவாக போகும் பாரதி - ஷர்மிளா எடுக்க போகும் முடிவு என்ன? சீரியலில் புதிய திருப்பம்!
வெண்பாவின் குழந்தைக்கு அப்பாவாக போகும் பாரதி – ஷர்மிளா எடுக்க போகும் முடிவு என்ன? சீரியலில் புதிய திருப்பம்!

வெண்பாவிற்கு ஷர்மிளா வேறொரு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதால் வெண்பா தன்னுடைய வயிற்றில் பாரதியின் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது எனவும், பாரதிக்கும் எனக்கும் திருமணம் செய்து வையுங்கள் எனக் கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதிக்கு கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டு எப்போதுதான் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளப் போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாரதி கண்ணம்மாவை பிரிந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகியும் கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் துளிகூட குறையவே இல்லை. அந்த அளவுக்கு கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் குறையாத அளவுக்கு வெண்பா பார்த்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

தற்போது வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்கிற புதிய கதாபாத்திரம் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார் . வெண்பாவின் அம்மா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் வெண்பாவிற்கே வில்லியாக இருந்து வருகிறார். தற்போது கூட பாரதியை நீ மறந்து விட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் என வெண்பாவை மிரட்டிக் கொண்டிருக்கிறார். வெண்பாவும் ஷர்மிளாவுக்கு மிகவும் பயந்து கொண்டிருக்கிறார்.

சன் டிவி “கோலங்கள்” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் “கலர்ஸ் தமிழ்” சேனலில் ஒளிபரப்பு!

நான் ஆசைப்பட்ட அனைத்தையும் எனது அம்மாதான் எனக்கு செய்து கொடுத்து இருக்கிறார். ஆனால் நான் பாரதி மீது ஆசை படுவது மட்டும் வேண்டாம் என தட்டிக் கழிக்கிறார் எனக்கூறி வெண்பா மிகவும் வருத்தப்படுகிறார். இதுமட்டுமல்லாமல் ஷர்மிளாவை பற்றி வெண்பாவிற்கு நன்றாகவே தெரியும். அவர் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்து விட்டால் அதை செய்து முடிக்கும் வரை ஓயவே மாட்டார். இதனால் எப்படியும் தனக்கு பாரதியை திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என பயந்து எனது வயிற்றில் பாரதியின் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது, எனக்கும் பாரதிக்கும் திருமணம் செய்து வையுங்கள் என ஷர்மிளாவிடம் வெண்பா கெஞ்சுவது போன்ற புரோமோ வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!