விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கி செய்த காரியம் – ஹேட்டர்களுக்கு பதிலடி!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக கோமாளியாக கலக்கி வரும் ஷிவாங்கி பற்றி ஹேட்டர் ஒருவர் வெளியிட்ட பதிவிற்கு ஷிவாங்கி புத்திசாலித்தனமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி ஷிவாங்கி:
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவாங்கி. பாடல் திறமையை காட்ட வந்தவருக்கு நகைச்சுவை திறமை இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான் தெரிய வந்தது. அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் மூன்றாவது சீசன் வரை கோமாளியாக கலக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஷிவாங்கியும் ஒரு காரணமாக இருக்கிறார். ஷிவாங்கியும் புகழ் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.
திருப்பதியில் வரலாறு காணாத அளவு குவிந்த உண்டியல் காணிக்கை – ஒரே மாதத்தில் ரூ.130 கோடி!
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரோஷினி, வித்யூலேகா, தர்சன், அம்மு அபிராமி, ஸ்ருதிகா, முத்துக்குமார் ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கின்றனர். மேலும் ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, அதிர்ச்சி அருண், பாலா, குரேஷி ஆகியோர் கோமாளிகளாக இருக்கின்றனர். சென்ற வார எபிசோடில் சில தனிப்பட்ட காரணங்களால் ஷிவாங்கி கலந்து கொள்ளவில்லை.
என்ன தான் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் ஒரு சில ஹேட்டர்கள் ஷிவாங்கிக்கு இருக்கின்றனர். அவர்கள் சென்ற வாரம் ஷிவாங்கி வராததை நினைத்து சந்தோசப்பட்டு மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு இருந்தனர். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ஷிவாங்கி “நிகழ்ச்சியில் இல்லாத என்னை பற்றி பேசி ஹேட் பண்றதுக்கு பதிலாக இருக்குற செம கோமாளி பற்றி பேசினா இன்னும் சூப்பரா இருக்கும் ப்ரோ என பதில் கொடுத்து இருக்கிறார்.