ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

0
ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்தால் அல்லது கடவுச்சொல்லை மறந்துவிட்டால் அதை எப்படி பிளாக் செய்வது என்ற விவரத்தை பார்ப்போம். சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு என்று தனி தனி விதிமுறைகள் உள்ளன. அந்த வகையில் நாம் இன்று எஸ்பிஐ-யில் எப்படி பிளாக் செய்வது? எப்படி புதிய கார்டு பெறுவது என்பதை பார்க்கலாம்.

எஸ்பிஐ வங்கி

முந்தைய காலகட்டத்தில் ஏடிஎம் கார்டு தொலைந்தால் அல்லது கடவுச்சொல்லை மறந்தால் அதை திருப்ப பெறவோ பிளாக் செய்யவோ மிக எளிதாக செய்ய முடியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு போன் மூலமாக பல வசதிகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கிளையை அணுகி தெரிவிக்கலாம் அல்லது போன் மூலம் பிளாக் செய்வது, SMS மூலம் பிளாக் செய்வது மற்றும் ஆன்லைன் மூலம் பிளாக் செய்வது என்று வசதிகள் உள்ளன.

மாநிலத்தில் காவலர்களுக்கு மே 4ம் தேதி வரை விடுமுறை ரத்து – உடனடியாக பணிக்கு திரும்ப அதிரடி உத்தரவு!

எஸ்எம்எஸ் மூலம் தொலைந்து போன டெபிட் கார்டு பெற, block xxxx இதில் டெபிட் கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்ணை உள்ளிட வேண்டும். இந்த எஸ்எம்எஸ் கட்டாயம் உங்கள் வங்கிக் கணக்கில் இணைத்துள்ள பதிவு மொபைல் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும். உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டால், இதனை உறுதிபடுத்த உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும். பின்னர் உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டால், அதற்காக உறுதிபடுத்த உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும்.

போன் மூலம் பிளாக் செய்ய 1800 11 2211 என்ற எண்ணுக்கும், இதே 1800 425 3800 என்ற எண்ணுக்கு கால் செய்யலாம். இது தவிர 0802659 9990 என்ற எண்ணுக்கும் கால் செய்து பிளாக் செய்யலாம். இந்த எண்ணிற்கு அழைத்து தொலைந்து போன டெபிட் கார்டை பிளாக் செய்யலாம். எஸ்பிஐ வங்கியின் ஹெல்ப்லைன் நம்பர் 24 மணி நேரமும் செயலில் இருக்கும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி ரேஷன் கடைதான் பேங்க்!

ஆன்லைன் மூலம் பிளாக் செய்ய வாடிக்கையாளர்கள் https://onlinesbi.com/ என்ற இணையதளத்தில் சென்று உங்கள் இணைய வங்கியின் லாகின் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு E-services என்ற ஆப்ஷன் கீழ் ATM card services என்பதை கிளிக் செய்து, அதில் Block ATM என்பதை கிளிக் செய்து அதன் பின்னர் பிளாக் என்பதை கிளிக் செய்து, எதற்கு பிளாக் செய்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்யவும். ஒரு முறைக்கு இருமுறை விவரங்களை சரிபார்த்து பின்னர் சப்மிட் கொடுக்கவும். இதை உறுதிப்படுத்த உங்கள் ஓடிபி அல்லது Profile பாஸ்வேர்டினை கொடுத்து confirm என்பதை கிளிக் செய்யவும்.

நாடு முழுவதும் 45 நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கடும் அவதியில் 400 மில்லியன் மக்கள்!

டெபிட் கார்டினை விண்ணப்பிக்க https://onlinesbi.com/ எஸ்பிஐ – வாடிக்கையாளர்கள் தங்களது யோனோ ஆப்பை லாகின் செய்து அதில் e- services என்பதன் கீழ், ஏடிஎம் கார்டு சேவைகள்’ என்பதை கிளிக் செய்யவும் பின்னர் உங்களுடைய டெபிட் அல்லது ஏடிஎம் கார்டை கிளிக் செய்யவும். அதில் OTP எண்ணை உள்ளிடவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் விவரங்களை சரிபார்த்து, சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும். உங்களுடைய புதிய ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு 7 நாட்களுக்குள் வீட்டிற்கு வந்துவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!