TNPSC Group 2 & 2A தேர்வு கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழு விவரம்!

0
TNPSC Group 2 & 2A தேர்வு கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழு விவரம்!
TNPSC Group 2 & 2A தேர்வு கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழு விவரம்!
TNPSC Group 2 & 2A தேர்வு கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழு விவரம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2A தேர்வானது கடந்த மே 21 ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் குறித்தும் மெயின் தேர்வுக்கான கட் ஆஃப் மார்க் எவ்வளவு என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு:

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுமார் 5529 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் அதில் 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மீதமுள்ள 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதவில்லை.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மெயின் தேர்வுக்கு தயாராவதற்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் தேவை என தெரியாமல் தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் குரூப் 2 மெயின் தேர்வானது செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வின் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 -க்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூலை மாதம் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது ஜூலை மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை – வருகைப் பதிவில் சிக்கல்!

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம்?

  • முதலில் TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ க்கு செல்ல வேண்டும்
  • அதன் பின் முக்கியமான இணைப்புகள் பிரிவின் கீழ் “latest results/Result declaration schedule” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
  • அதன் பின் TNPSC முடிவுகள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் கிடைக்கும் பக்கத்திற்கு செல்லப்படும்.
  • அதில் மே 21 நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை தேட வேண்டும்.
  • TNPSC Group 2 Result 2022 -க்கான இணைப்பைக் கிளிக் செய்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் காட்டப்படும்.

கட் ஆஃப் மதிப்பெண்கள்:

TNPSC குரூப் 2 கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி பொதுப்பிரிவினர் வகையில் ஆண்களுக்கான கட் ஆஃப் மார்க் 161 ஆகும். பெண்களுக்கு 158, BC வகையில் ஆண்களுக்கு 159, பெண்களுக்கு 157, MBC வகையில் ஆண்களுக்கு 156 பெண்களுக்கு 154, BC(M) வகையில் ஆண்களுக்கு 151 பெண்களுக்கு 148, SC வகையில் ஆண்களுக்கு 153, பெண்களுக்கு 150, SC(A) வகையில் ஆண்களுக்கு 149 பெண்களுக்கு 142, ST வகையில் ஆண்களுக்கு 144, பெண்களுக்கு 140 ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!