பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? கொரோனா பரவல் எதிரொலி! உண்மை நிலவரம் என்ன?

0
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? கொரோனா பரவல் எதிரொலி! உண்மை நிலவரம் என்ன?
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? கொரோனா பரவல் எதிரொலி! உண்மை நிலவரம் என்ன?
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? கொரோனா பரவல் எதிரொலி! உண்மை நிலவரம் என்ன?

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களிலும் பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று ஆலோசிக்கப்படுகிறது.

பள்ளிகள் மூடல்:

கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது முழுவதுமாக மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் அனைத்தும் சமீபத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை வைரஸின் பரவல் நாட்டில் பல மாநிலங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நோய் தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால், பள்ளிகளைத் திறக்க அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜனவரி 16ம் தேதி வரை அதாவது இன்று வரை மூட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இனி வரும் நாட்களில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. உத்தரகாண்ட் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குளிர்கால விடுமுறை ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், ஜனவரி 3 முதல், 15 முதல் 18 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றது. ஆனால் சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சத்தில் உள்ளனர்.

பீகார்:

பீகாரில் 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றன. 1 முதல் 8 வகுப்புகளுக்கு, ஜனவரி 21ம் தேதி வரை பள்ளிகள் மூடபப்ட்டு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும்.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டத்தை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தார். ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜனவரி 15 முதல் 31 வரை மூடப்படும் எனமுடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத மற்றும் வணிக கண்காட்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post Office இல் ரூ.1000 சேமிப்பதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ் – செல்வமகள் சேமிப்பு திட்டம்!

ஹரியானா:

ஹரியானாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜனவரி 26-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 13 முதல் 50 சதவீத ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். இது தொடர்பாக, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளையும் ஜனவரி 30ம் தேதி வரை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில், இந்த உத்தரவு ஜனவரி 11 செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. புதிய வழிகாட்டுதல் ஜனவரி 11 முதல் ஜனவரி 30 வரை தொடரும். லோஹ்ரி மற்றும் மகர சங்கராந்தி பண்டிகையை வீட்டில் இருந்தே கொண்டாடுமாறு மாநில மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் நோய் நிலைமை ஆய்வு செய்யப்பட்டு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு, தனியார், எம்சிடி, டெல்லி கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகள் திறக்கப்படாது. தற்போது சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பாக புதிய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய 2 போட்டியாளர்கள் – டைட்டில் வின்னர் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சத்தீஸ்கர்:

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதிகரித்து வருவதால் சத்தீஸ்கரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் சத்தீஸ்கரின் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செமஸ்டர் தேர்வு ஜனவரி 2022 முதல் தொடங்க இருப்பதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில் இருக்குமா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

பஞ்சாப்:

கொரோனா தொடர்பாக பஞ்சாபில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு நீடிக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, எந்த ஒரு விழாவிலும் 50 பேருக்கு மேல் மூடிய அரங்கிலும், 100 பேருக்கு மேல் திறந்த வெளியிலும் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!