இலவச மின்சாரம் வாக்குறுதி என்னாச்சு? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய மந்திரி கேள்வி!

0
இலவச மின்சாரம் வாக்குறுதி என்னாச்சு? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய மந்திரி கேள்வி!
இலவச மின்சாரம் வாக்குறுதி என்னாச்சு? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய மந்திரி கேள்வி!

இலவச மின்சாரம் வாக்குறுதி என்னாச்சு? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய மந்திரி கேள்வி!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை டெல்லியில் நிறைவேற்றினாரா? என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இலவச மின்சாரம் வாக்குறுதி:

வாக்குகளுக்காக மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதாகவும், இலவசங்களால் நாடு முன்னேற்றமடையாது என்றும் பிரதமர் மோடி கூறியது, இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதாவது அரசியல் கட்சிகள் இங்கு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வாரி வழங்குகிறது. இது ஒரு ஆபத்தான கலாசாரமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆபத்தான கலாச்சாரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால் கூறியது, ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது இலவசம் அல்ல என்றும் அது அரசின் கடமை என்று கூறியுள்ளார்.

மேலும் தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் பல லட்சம் கோடி கடன்களை இலவசம் என்று அவர் சாடியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர விழாவை முன்னிட்டு 115 அடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்கள் இடம் பெறுவதில் தவறில்லை என்றார். வங்கியில் நிலுவையில் உள்ள பல லட்சம் கோடி தொகையை தள்ளுபடி செய்வதே உண்மையான இலவசம் என்று மோடி அரசை கெஜ்ரிவால் சாடினார்.

Exams Daily Mobile App Download

TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்கள் இடம்பெறுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியே கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர். பல மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லியில் அதனை நிறைவேற்றினாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகிறது என்றால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ க்கள் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்க்காதது ஏன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!