TNPSC குரூப் 2 & 2A தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரங்கள் இதோ!

1
TNPSC குரூப் 2 & 2A தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 2 & 2A தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 2 & 2A தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. தவிர இத்தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கட் ஆஃப் மதிப்பெண்கள்

தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் 21ம் தேதியன்று குரூப் 2 மற்றும் 2A போட்டித் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. அந்த வகையில் இம்முறை 5529 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 11 லட்சம் பேருக்கு மேல் எழுதி இருந்தனர். மேலும் விண்ணப்பித்தவர்களில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது தேர்வு எழுதிய லட்சக்கணக்கானவர்கள் அதன் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் எழுத்துத் தேர்வுக்குரிய முடிவுகள் வெளியானால் மட்டுமே மெயின் தேர்வுக்கு படிக்க முடியும் என்பதால் விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என்றும் மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!

இருப்பினும் இம்மாதம் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் வெளியாக இருப்பதாக சில தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முதன்மை தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் டிசம்பர் மாதத்தில் கலந்தாய்வு மற்றும் ஜனவரி மாதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது, குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பார்த்தால், ஆண்களுக்கான கட் ஆஃப் பொதுப்பிரிவினருக்கு 158-163, பெண்களுக்கு 155-160 என இருக்கலாம் என்று தெரிகிறது. அதே போல, BCல் ஆண்களுக்கு 153-158 பெண்களுக்கு 147-152, MBCல் ஆண்களுக்கு 151-156, பெண்களுக்கு 145-150, BC (M)ல் ஆண்களுக்கு 147-152, பெண்களுக்கு 140-145, SCல் ஆண்களுக்கு 145-150, பெண்களுக்கு 147-152, SC (A)ல் ஆண்களுக்கு 145-150, பெண்களுக்கு 138-143, STல் ஆண்களுக்கு 145-150, பெண்களுக்கு 138-143 என்ற அடிப்படையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!