மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன? பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

0
மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன? பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன? பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன? பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

தனிநபரின் அடையாள அட்டையாக விளங்கிவரும் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. தற்போது ஆதார் அட்டையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதார் அட்டை என்கிற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாஸ்க் ஆதார் வசதி:

அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டுகள் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆதார் கார்டுடன் கட்டாயமாக ரேஷன் கார்டு, வங்கி கணக்கு மற்றும் பான் அட்டையை இணைப்பது மிகவும் அவசியமாகும். இப்போது ஆதார் கார்டுடன் இந்த ஆவணங்களை இணைக்க அவகாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணை அவசியமில்லாமல் எந்த நிறுவனத்திலும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. நம்முடைய ஆதார் அட்டையை வேறு யாராவது பயன்படுத்திவிடாமல் இருப்பதற்காக கூடுதல் பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

ஆதார் அட்டையின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதார் அட்டை என்கிற வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மூலமாக பல முறைகேடுகள் நடைபெறுகிறது. இதனால் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து தனிநபரின் அனைத்து வங்கி விபரங்கள் என அனைத்தையும் சேகரிக்க முடியும். இதனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணை யாரிடமும் எக்காரணம் கொண்டும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அவசியமான நேரத்தில் ஆதார் அட்டையில் உள்ள கடைசி 4 இலக்க எண்களை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது மாஸ்க் ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம். மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையை UIDAI என்கிற இணைய முகவரியின் மூலமாக பதிவிறக்கம் செய்து myaadhaar.uidai.gov.in என்கிற முகவரிக்கு சென்று Login செய்துகொள்ள வேண்டும். பின்பு, ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவிட்ட பிறகு ஓடிபி என்கிற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.  பின்பு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபியை பதிவு செய்து லாகின் செய்த பிறகு Services என்கிற ஆப்சனை கிளிக் செய்து Download Aadhaar என்பதையும் க்ளிக் செய்ய வேண்டும். பின்பு,  Review your Demographics Data என்ற பகுதியில் உள்ள Do you want a masked Aadhaar? என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்பு மாஸ்க் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!