TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – என்னென்ன விதிமுறைகள்?
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணித் தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி முதல்நிலைத் தேர்வுகள் நாளை (மே 21-ம் தேதி) 38 மாவட்டங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்வர்களுக்கு முக்கிய விதிமுறைகளை TNPSC வெளியிட்டு உள்ளது.
முக்கிய விதிமுறைகள்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி23 ஆம் தேதி TNPSC இணையதளத்தில் வெளியிட்டது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வு (மே 21 ஆம் தேதி) நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் குரூப் 2, 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in-யில் வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும். மேலும் 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், தேர்வு முடிந்த பின்னர் தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
மேலும் நாளை நடைபெறும் குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வறையில் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசத்தை அகற்றாமல், எப்போதும் அணிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்சுகள் அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள், 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்