பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக்கிங் அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH முறை?

0
பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக்கிங் அறிவிப்பு - முடிவுக்கு வரும் WFH முறை?
பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக்கிங் அறிவிப்பு - முடிவுக்கு வரும் WFH முறை?
பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக்கிங் அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH முறை?

அமெரிக்காவை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, தனது ஊழியர்களது WFH முறையை முடித்து விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WFH முறை:

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து உலகளவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஹைப்ரிட் அல்லது WFH முறையை அமல்படுத்தியது. இப்போது கொரோனா தொற்று நிலைமை மேம்படத் தொடங்கியதால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளன. அந்த வகையில் உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை முடித்ததாக தெரிகிறது.

TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டம்!

அதாவது, ட்விட்டர் இன்க் நிறுவனத்திற்கான தனது 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை சமீபத்தில் நிறுத்தி வைத்துள்ள மஸ்க் தனது டெஸ்லா நிறுவன ஊழியர்களை மீண்டும் பணியிடத்திற்கு திரும்பும்படி கேட்டு மெயில் அனுப்பியதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில், ‘வீட்டிலிருந்து வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். இது தொழிற்சாலை ஊழியர்களிடம் நாங்கள் கேட்பதை விடக் குறைவு.

Exams Daily Mobile App Download

ரிமோட் வேலை இனி ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ளார். மேலும், டெஸ்லா தலைவர் தனது ஊழியர்களிடம் தொலைதூர பணியை இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேட்டுள்ளார். இருப்பினும், விதிவிலக்கான பங்களிப்பாளர்களுக்கு இந்த நிறுவனம் விதிவிலக்குகளை மதிப்பாய்வு செய்து WFH முறையை அங்கீகரிக்கும் என்று மஸ்க் வலியுறுத்தினார். மேலும், டெஸ்லா அலுவலகம் வேலை கடமைகளுடன் தொடர்பில்லாத தொலைதூர கிளை அலுவலகத்தில் இருந்து வேலை செய்யவும் ஊழியர்களை அனுமதித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!