முடிவுக்கு வரும் WFH முறை? அலுவலகம் திரும்பும் ஊழியர்களின் எதிர்பார்ப்பு இது தான்? ஆய்வுத் தகவல்!

0
முடிவுக்கு வரும் WFH முறை? அலுவலகம் திரும்பும் ஊழியர்களின் எதிர்பார்ப்பு இது தான்? ஆய்வுத் தகவல்!
முடிவுக்கு வரும் WFH முறை? அலுவலகம் திரும்பும் ஊழியர்களின் எதிர்பார்ப்பு இது தான்? ஆய்வுத் தகவல்!
முடிவுக்கு வரும் WFH முறை? அலுவலகம் திரும்பும் ஊழியர்களின் எதிர்பார்ப்பு இது தான்? ஆய்வுத் தகவல்!

இந்தியாவில் உள்ள IT நிறுவன ஊழியர்கள் WFH வேலையே முடித்து, அலுவலகத்தில் இருந்து வேலை செய்யத் தொடங்கும் போது வேலை செய்யும் முறையை மாற்ற விரும்புவதாகவும், சில சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது.

IT ஊழியர்கள்

இந்தியாவில், கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் இப்போது அந்த வேலை முறை நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதாக கருதுகின்றனர். இதற்காக இப்போது பல ஊழியர்கள் தங்களது வேலைகளை இழக்கக் கூட தயாராகிவிட்டனர். அதாவது, நாடு முழுவதும் கொரோனா தொற்று ஓய்ந்து வந்ததையடுத்து அலுவலக பணியாளர்கள் மீண்டும் நேரடி வருகையை தர வேண்டும் என்று நிர்பந்தித்து வருவதால் ஒரு சில ஊழியர்கள் WFH முறையின் நெகிழ்வுத்தன்மையை விட்டு வரமுடியாமல் வேலையை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம், ஜன.1 முதல் அகவிலைப்படி – வலுக்கும் கோரிக்கை!

குறிப்பாக, 10ல் 6 பேர் தங்களது வேலைகளை விட இருப்பதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது. இருப்பினும் TCS போன்ற ஒரு சில நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு WFH அல்லது அலுவலக வேலை என 2 விருப்பங்களை வழங்க தயாராக இருக்கிறது. இப்போது, அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்கள் அங்கு சில மாற்றங்களை எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் தகவல் அளித்துள்ளன. இது குறித்து பார்க்கையில், முதலாவதாக சில ஊழியர்கள் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளை எதிர்பார்க்கிறார்கள். அதாவது, புதிதாக கற்றுக்கொள்வதற்கும், எளிதாக மற்றவர்களுடன் உரையாடுவதற்கும் ஏற்ற சூழலை 80-80% பேர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஊதிய உயர்விற்கான புதிய சூத்திரம்!

இதற்கு அடுத்தபடியாக, WFH முறையில் பலரும் தங்களது அன்றாட தேவைகளுடன் வேலை முறையை மாற்றியமைத்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, அலுவலக வழக்கத்தை விட அதிக நேரம் வேலை முறை, அலுவலகத்தில் ஏற்படும் அழுத்தமான சூழ்நிலை, தனிப்பட்ட காரியங்களுக்காக வேலை நேரத்தை மாற்றியமைத்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு இணக்கமான சூழலை WFH ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் WFH ஊழியர்கள் அனைவரும் இந்த அழுத்தமற்ற வேலை முறையை தொடர விரும்புகின்றனர். இருப்பினும் அலுவலகத்தில் குழுவாக அமர்ந்து உண்ணும் மதிய உணவு, டின்னர், கொண்டாட்டங்கள், கார்ப்பரேட் மாநாடுகள், பயிற்சி அமர்வுகள், கஸ்டமர் விசிட் ஆகியவற்றை ஊழியர்கள் இழந்து போவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!