TCS, Infosys, Cognizant & HCL நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? நிர்வாகம் சொல்வது இது தான்? முழு விவரம் இதோ!

0
TCS, Infosys, Cognizant & HCL நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? நிர்வாகம் சொல்வது இது தான்? முழு விவரம் இதோ!
TCS, Infosys, Cognizant & HCL நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? நிர்வாகம் சொல்வது இது தான்? முழு விவரம் இதோ!
TCS, Infosys, Cognizant & HCL நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? நிர்வாகம் சொல்வது இது தான்? முழு விவரம் இதோ!

இந்தியாவில் கொரோனா பேரலைத்தொற்றின் வேகம் குறைந்து வந்ததையடுத்து டிசிஎஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட், எச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை படிப்படியாக முடிக்க திட்டமிட்டுள்ளது.

WFH முறை:

நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று ஓய்ந்திருக்கும் இந்த சூழலில் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் வழக்கமான பாணியில் மீண்டுமாக செயல்பட துவங்கி இருக்கிறது. அதே போல இந்தியாவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைக்க தயாராக உள்ளது. இதில் ஒரு சில நிறுவனங்கள் கலப்பின மாடலுடன் அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், மற்றவை படிப்படியாக தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க முயற்சித்து வருகிறது.

டிசிஎஸ்:

இப்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதாலும் தடுப்பூசி செலுத்துவது பரவலாக மேற்கொள்ளப்பட்டதாலும் டிசிஎஸ் நிறுவனம் கலப்பின முறைக்கு மாறுகிறது. இருப்பினும் இந்நிறுவனத்தின் சில ஊழியர்கள் அலுவலக வளாகங்கள் மற்றும் தொலைதூரத்தில் வேலை செய்யும் இரண்டிலும் நேரத்தை செலவிட விரும்புகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு இந்த நிறுவனம் அதன் ஊழியர்களை வரும் மாதங்களில் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்ப அழைக்கும். ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாக-நிலை ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து வழக்கமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனுடன் TCS ஒரு தனித்துவமான பணி மாதிரியை உருவாக்கியுள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை 25 சதவீதத்திற்கு மேல் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கும். இந்த 25-25 மாதிரியைப் பொறுத்தவரை, ஊழியர்கள் அலுவலகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் நேரத்தை செலவிட வேண்டியதில்லை. இந்த வேலை மாதிரியின் ஒரு முக்கிய பகுதியாக, முதலில் அவர்களை அலுவலகங்களுக்கு கொண்டு வந்து படிப்படியாக கலப்பின வேலை மாதிரிக்கு மாற்றுவது என டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.

HCL டெக்னாலஜிஸ்:

HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் தற்போதுள்ள நிலைமையை கண்காணித்து வருகிறது என்றும் ஒரு கலப்பின மாதிரியில் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது தனது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகிய இரண்டின் முன்னுரிமைகளையும் சமநிலைப்படுத்துகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் வணிக இயல்பு நிலையை பராமரிக்க உறுதி பூண்டுள்ளது.

இன்ஃபோசிஸ்:

இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஆரம்ப கட்டங்களில், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே அலுவலகத்திற்கு நேரில் வருமாறு அதன் ஊழியர்களை ஊக்குவிக்கும். இந்த நிறுவனமும் ஒரு கலப்பின மாடலைக் கருதுகிறது. அதில் 40-50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்பிய பிறகு அலுவலகத்திலிருந்து வேலை செய்வார்கள்.

காக்கினிசன்ட்:

இந்த நிறுவனம் ஏப்ரல் 18 முதல், ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் அலுவலகங்களில் இருந்து வேலை செய்யலாம் என தெரிவித்துள்ளது. அதன் பிறகு ஜூலை முதல் டிசம்பர் 2022 வரை, கிளையண்ட், காக்னிசண்ட் அலுவலகம் அல்லது ரிமோட் என ஊழியர்களை அவர்களின் புதிய பணியிடத்தின்படி வகைப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!