மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – அதிகாரம் யார் கையில்?

0
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - அதிகாரம் யார்
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - அதிகாரம் யார்
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – அதிகாரம் யார் கையில்?

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 8 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாளை (மே 2) வெளியாகிறது.

சட்டப்பேரவை தேர்தல்

மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளுக்கும் மே மாதம் 16 ஆம் தேதிக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வரை அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியாவில் அதிகளவு தொகுதிகளை கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் முதன்மை கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரியணை ஏறப்போவது யார்?

மாநிலம் முழுவதும் 8 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் முதல் கட்டத்தில் 76% வாக்குப்பதிவும், இரண்டாம் கட்டத்தில் 75.47% வாக்குப்பதிவும், மூன்றாம் கட்டத்தில் 73% வாக்குப்பதிவுகள் முறையே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) நடைபெறுகிறது. முன்னதாக மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜீ மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

TN Job “FB  Group” Join Now

மேற்கு வங்கத்தில் தற்போது கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சுமூகமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. India Today மற்றும் Axis My India நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, பாஜக: 134-160 இடங்களையும், 130-156 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 2 (நாளை) காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், பிற்பகல் முதலே முன்னிலை விபரங்கள் வெளிவர தொடங்கும். மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள நமது Tamil Examsdaily வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!