விரைவில் வெண்பாவிற்கு விக்ரமுடன் திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விரைவில் வெண்பாவிற்கு விக்ரமுடன் திருமணம் - ப்ரோமோ ரிலீஸ்!
விரைவில் வெண்பாவிற்கு விக்ரமுடன் திருமணம் - ப்ரோமோ ரிலீஸ்!
விரைவில் வெண்பாவிற்கு விக்ரமுடன் திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!

பாரதியை தான் திருமணம் செய்வேன் என வந்த மாப்பிள்ளையெல்லாம் வேண்டாம் வேண்டாம் என சொல்லி கொண்டிருக்கும் வெண்பாவை வலுக்கட்டாயமாக விக்ரமிற்கு ஷர்மிளா திருமணம் செய்து வைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்களா என சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. எப்போதும் கண்ணம்மாவை வெறுத்து ஒதுக்கி கொண்டிருக்கும் பாரதி தற்போது கண்ணம்மாவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கண்ணம்மா மீது தற்போது பாரதிக்கு நல்ல எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கண்ணம்மா உண்மையாகவே நம்மை ஏமாற்றிருப்பாரா என பாரதி நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

Exams Daily Mobile App Download

வெண்பா இருக்கும் வரைக்கும் பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. DNA டெஸ்ட் எடுக்காமல் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு மேலாகியும் கண்ணம்மாவை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வருவதால் எப்படியும் இருவரும் விரைவில் சேர்ந்துவிடுவார்கள் என ரசிகர்கள் எண்ணி கொண்டிருக்கின்றனர். இதற்கு நடுவே எப்படியாவது வெண்பாவை பாரதியை மறக்க வைத்து வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஷர்மிளா திட்டம் போட்டு கொண்டிருக்கிறார்.

Prank செய்து கீர்த்தி ஷெட்டியை அழவைத்த பேட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே ஷர்மிளா வெண்பாவிற்கு ஒரு மாப்பிளை பார்த்திருந்தார். அந்த மாப்பிள்ளையின் குணம் சரியில்லை என அது இதுவென பொய் சொல்லி தட்டி கழிக்கிறார். பாரதியை திருமணம் செய்ய தான் இது போல தட்டி கழிக்கிறார் என்பதை ஷர்மிளா புரிந்துகொண்டு வெண்பாவை வலுக்கட்டாயமாக விக்ரமிற்கு திருமணம் செய்து வைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தை என்ன சொல்லி நிறுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!