வார விடுமுறைகள், மாத சம்பளத்தில் மாற்றங்கள் – மத்திய அரசின் புதிய ஊதியக் குறியீடு கொள்கை 2022!

0
வார விடுமுறைகள், மாத சம்பளத்தில் மாற்றங்கள் - மத்திய அரசின் புதிய ஊதியக் குறியீடு கொள்கை 2022!
வார விடுமுறைகள், மாத சம்பளத்தில் மாற்றங்கள் - மத்திய அரசின் புதிய ஊதியக் குறியீடு கொள்கை 2022!

வார விடுமுறைகள், மாத சம்பளத்தில் மாற்றங்கள் – மத்திய அரசின் புதிய ஊதியக் குறியீடு கொள்கை 2022!

இந்த ஆண்டு முதல் அனைத்து தொழில்துறைகளிலும் அமல்படுத்தப்பட இருக்கும் புதிய ஊதியக் குறியீடு கொள்கையின் படி, ஊழியர்களுக்கு கிடைக்கும் வேலை நேரம், வாராந்திர விடுமுறைகள், புதிய சம்பள அமைப்பு உள்ளிட்டவை மாற இருக்கிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

ஊதியக் குறியீடு:

மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ஊதியக் குறியீடு கொள்கை ஊழியர்களுக்கான வாராந்திர விடுமுறைகள், புதிய சம்பள அமைப்பு, வேலை நேரம் மாற்றம் உள்ளிட்ட பலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது. இந்த கொள்கையானது இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இது அக்டோபரில் தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் கூறுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அனைத்து மாநிலங்களும் ஊதிய கொள்கைகளை அமல்படுத்துவதற்கான வரைவு விதிகளை இறுதி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்போது இந்த புதிய ஊதிய விதியின் கீழ் ஊழியர்கள் வீடுகளுக்கு எடுத்து செல்லும் சம்பளம் குறைக்கப்படலாம். இதன் விளைவாக அவர்களின் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். ஏனெனில், 2019 இன் ஊதியக் குறியீடு சட்டத்தின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை இழப்பீடு, நிறுவனத்தின் செலவில் (CTC) பாதிக்கும் குறைவாக இருக்கக்கூடாது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளங்களை குறைத்து, வழக்கத்திற்கு மேல் கூடுதல் சலுகைகளை அளித்து வருகின்றன.

இந்த புதிய ஊதிய விதியின் கீழ், ஊழியர்களின் விடுப்பு நேரம் 240 மணி நேரத்திலிருந்து 300 மணிநேரமாக நீட்டிக்கப்படலாம். இது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம், தொழிலாளர் சங்கம் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கைகளை எழுப்பி இருக்கிறது. தொடர்ந்து ஊழியர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ஆக உயர்த்தப்படும். அதே நேரத்தில் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை நாளாக இருக்கும். தவிர ஒரு வாரத்தில் 48 மணி நேர வேலை வார விதி என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம், வாரத்தில் 6 நாட்கள் என்ற வேலை கணக்கில் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும்.

ரெப்போ, வீடு & வாகன கடன் வட்டி விகிதங்களில் மாற்றங்கள்? RBI ஆளுநர் விளக்கம்!

அந்த வகையில் ஒரு நிறுவனம் ஒரு நாளில் 12 மணிநேர வேலை முறையை ஏற்றுக்கொண்டால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு ஊழியருக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த வேலை நேரம் அதிகரிக்கப்பட்டால், வேலை நாட்கள் 6க்கு பதிலாக 5 அல்லது 4 ஆக குறைக்கப்பட்டு விடுமுறைகள் அதிகரிக்கப்படலாம். தொடர்ந்து புதிய ஊதியச் சட்டம், ஒரு பணியாளரின் நிறுவனத்திற்கான செலவு (CTC) அடிப்படை வருமானம், HRA, ஓய்வூதியப் பலன்கள் மற்றும் LTA பொழுதுபோக்கு அலவன்ஸ் ஆகியவற்றை மொத்த வருமானத்தில் 50%க்கு மேல் கொடுப்பனவுகளை அனுமதிக்காது.

அதாவது ஒரு ஊழியரின் மாத வருமானம் ரூ.50,000 எனில், அவருடைய அடிப்படை ஊதியம் ரூ.25,000 ஆகவும், மீதமுள்ள ரூ.25,000ல் அவரது சலுகைகளுக்கானதாக இருக்க வேண்டும். இதற்கு முன்பு வரை, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 25-30% ஆக இருந்தது. அதைச் சலுகைகளுடன் சேர்த்துக் கொண்ட நிறுவனங்கள் இனி அடிப்படை வருமானத்தை 50%க்கு கீழே வைத்திருக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், புதிய ஊதியக் குறியீட்டின் தரநிலைகளுக்கு இணங்க, வணிகங்கள் பல்வேறு கூடுதல் சலுகைகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இது போன்ற பல விதிகள் புதிய ஊதியச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களையும், மில் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களையும் கூட பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தவிர ஊழியர்களின் சம்பளம், அவர்களது விடுமுறைகள் மற்றும் வேலை நேரங்கள் அனைத்தும் மாறும். இருந்தாலும் புதிய ஊதியச் சட்டம் சில நன்மைகளையும் அளிக்கிறது. இப்போது இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here