வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போதுள்ள புதிய பாதிப்புகளை ஆய்வு செய்த மாநில அரசு இந்த வார துவக்கத்தில் இருந்து வார இறுதிகளில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்
உத்தரபிரதேச மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் விதிக்கப்பட்டிருந்த வார இறுதி ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று (ஆகஸ்ட் 19) ஒரு நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 29 கொரோனா வழக்குகளும், 2 இறப்பும் பதிவாகியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு இந்த வார தொடக்கம் முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்திய அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்!
இதற்கு முன்னதாக உத்தரபிரதேச மாநில அரசு கடைகள் மற்றும் வணிகங்கள் அனைத்தும் வார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது நோய் தொற்று வீழ்ச்சியடைந்துள்ளதால் விதிமுறைகளை ஓரளவு தளர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து வார இறுதி தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. கூடுதலாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளுக்கு இடையேயான மெட்ரோ சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
TN Job “FB
Group” Join Now
இதனிடையே மாநிலம் முழுவதுமுள்ள கொரோனா சூழ்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதால் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை அரசு மீண்டும் துவங்கியுள்ளது. அதன்படி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆகஸ்ட் 16 முதல் பள்ளிக்குச் செல்லத் துவங்கியுள்ளனர். அதே நேரத்தில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதியும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.