வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்? உணவகங்கள் & திரையரங்குகளுக்கு அனுமதி? அரசு ஆலோசனை!

0
வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்? உணவகங்கள் & திரையரங்குகளுக்கு அனுமதி? அரசு ஆலோசனை!
வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்? உணவகங்கள் & திரையரங்குகளுக்கு அனுமதி? அரசு ஆலோசனை!
வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்? உணவகங்கள் & திரையரங்குகளுக்கு அனுமதி? அரசு ஆலோசனை!

தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தினசரி வழக்குகள் குறைந்து வருவதால் இனி வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்றும் சினிமா அரங்குகள் மற்றும் உணவகங்களுக்கு அனுமதி கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு நீக்கம்

இம்மாத துவக்கத்தில் ஆரம்பித்த கொரோனா 3ம் அலைப்பரவல் தொற்றானது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் சமீபத்தில் உச்சம் தொட்டு தற்போது சரிவடைய துவங்கி இருக்கிறது. அந்த வகையில் தேசிய தலைநகர் டெல்லியில் தினசரி கொரோனா தொற்று வழக்குகள் சுமார் 6,000 ஆக குறைந்து, நேர்மறை விகிதம் 10 சதவீதமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அமலில் இருந்து வரும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் சந்தைகள், மால்களுக்கான ஒற்றைப்படை விதிகள் போன்ற கட்டுப்பாடுகளை டெல்லி அரசாங்கம் விரைவில் நீக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ‘பான்’ எண் பதிவேற்றுவத்தில் கவனம்!

இது தவிர சினிமா அரங்குகள் மற்றும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்தும் வசதிகள் இனி 50 சதவீத அளவில் அனுமதிக்கப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் நாளை (ஜன.27) நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில், வார இறுதி ஊரடங்கு, சந்தைகள் மற்றும் மால்களில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த சரியான தேதிகள் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கான வழிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!

முன்னதாக பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கோரிக்கைகளை பெற்ற டெல்லி அரசாங்கம், வார இறுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற கட்டுப்பாடுகளை நீக்குவதற்காக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA ) தலைவர் அனில் பைஜாலுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பி இருக்கிறது. ஆனால் இந்த பரிந்துரைகளை DDMA மறுதலித்திருக்கிறது. என்றாலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!