தமிழக பள்ளிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பள்ளிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முக்கிய அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது, சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிப்பது முதல் பள்ளிகள் திறப்பது வரை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!

கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் கல்வி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை 2021 தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சரின் தலைமையில் 24.09.2021 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பேரிடர் இன்னல்களை தவிர்க்க பள்ளிக் கல்வி துறையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்கள், கட்டட நெறிமுறைகள் மற்றும் பள்ளி பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலுக்கிணங்க உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • மின் இணைப்புகள் மற்றும் கட்டமைப்புகளை கண்காணிப்பது, திறந்த வெளி கால்வாய்களை தார் வாரி மூடுவது, குழிகளை நிரப்பி சீரமைப்பது, ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி
    அகற்றுவது.
  • 2 மேல் தளத்தில் தடைப்பட்ட வடிகால்கள், மாடிப்படிக்கட்டுகளை சுத்தம் செய்வது.
  • பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டிடங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தல்.
  • சுகாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்புக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மாணவர்களுக்கு தெரிவிப்பது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்றுவது முதலியனவற்றை பள்ளிக்கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!