மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

0
மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை - வானிலை மையம் எச்சரிக்கை!!
மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை - வானிலை மையம் எச்சரிக்கை!!
மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 4 தினங்களுக்கான வானிலை நிலவரத்தை குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்:

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, தென்காசி, இராமநாதபுரம்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து நாளை முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அத்துடன் நாளை முதல் 18ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!