தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வரும் சூழலில் 10.02.2022 முதல் 14.02.2022 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் குமரி கடல்‌ பகுதியின் மேல்‌ நிலவும்‌ கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

IPL 2022 புதிய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா – பெருமையாக உள்ளதாக பேட்டி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

10.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

11.02.2022: தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி , பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

12.02.2022: தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌,திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, தேனி, இண்டுக்கல்‌, நீலகிரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

தமிழகத்தில் பிப்.16 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

13.02.2022: இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்கா௫, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

14.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here