15 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?

0
15 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?
15 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?
15 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?

பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒரு பயனர் புதிய ரேஷன் கார்டுகளை 2 வாரங்களில் அதாவது 15 நாட்களுக்குள்ளாக வீடுகளில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரேஷன் அட்டைகள்:

மத்திய அரசால் வழங்கப்பட ரேஷன் அட்டைகள் தற்பொழுது அனைத்து தேவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வகை ரேஷன் கார்டுகள் பல வகையாக பிரிக்கப்பட்டு, அரசின் உதவித்தொகைகள் மற்றும் சலுகைகளை பெறுவது, அடையாள ஆவணம் உள்ளிட்ட பல விதங்களுக்கு பயன்பட்டு வருகிறது. பொதுவாக இந்த ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு விண்ணப்பத்தை செலுத்திய பிறகு ஆவணங்கள் சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தமிழக அரசு வழங்கும் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதற்கான அலைச்சல்களும் அதிகம். இதற்கிடையில் 15 நாட்களுக்குள்ளாக ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் ஒரு சலுகையை ஆன்லைன் வழங்குகிறது. இது தவிர ஒரு குடும்ப அட்டையில் இருந்து, தனியாக பிரித்து வேறு குடும்ப அட்டையை வாங்குவது போன்ற சேவைகளை நாம் ஆன்லைன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக சில ஆவணங்கள் மட்டும் தேவைப்படுகின்றன. அதில் முதலாவதாக பழைய ரேஷன் கார்டுகளில் இருந்து, புதிய ரேஷன் அட்டைகளை பெற விரும்புபவரது பெயர்களை நீக்க வேண்டும்.

இதற்காக பயனரின் திருமண பதிவு சான்று கட்டாயமாகும். அதன் பின்னாக புதிய அட்டைகளில் குடும்ப தலைவரை சேர்க்க விரும்புபவரது புகைபடங்களை 5 MB அளவில் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவரது வீட்டு வரி, வாடகை ரசீது உள்ளிட்டவை தேவைப்படும். பிறகு கேஸ் இணைப்பு தகவல்கள் தேவைப்படும். இவற்றை வைத்து,

 • முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
 • அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதை திறந்து, மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 • அதன் அடுத்த பக்கத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும்.
 • அதன் பிறகு Name of family head என்ற பெட்டியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெயரை பதிவிடவும்.

TN Job “FB  Group” Join Now

 • பிறகு முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, மொபைல் எண், இமெயில் ஐடி விவரங்களை கொடுக்கவும்.
 • தொடர்ந்து புகைப்படத்தை பதிவிடவும்.
 • பிறகு தேவையான அட்டையை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.
 • இருப்பிட சான்றிதழில் கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் 1 MB அளவில் ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்யலாம்.
 • அடுத்து உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.
 • அதில் குடும்ப தலைவர் பெயரை பதிவு செய்தவுடன், நீங்கள் கொடுத்த மற்ற விவரங்கள் தோன்றும்.
 • அடுத்து ஸ்கேன் கொடுத்து ஆதார் தகவல்களை அப்லோட் செய்யவும்.
 • பிறகு உறுப்பினர் சேர்க்கை SAVE என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
 • தொடர்ந்து சமையல் எரிவாயு இணைப்பில் பெயர், விவரங்கள், சிலிண்டர் போன்றவற்றை பதிவிடவும்.
 • பிறகு நீங்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து உறுதி செய்யவும்.
 • இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.
 • அதை பயன்படுத்தி ரேஷன் அட்டையின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here