உங்களது ஆதார் எண் மறந்து விட்டதா? கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
உங்களது ஆதார் எண் மறந்து விட்டதா? கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
உங்களது ஆதார் எண் மறந்து விட்டதா? கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
உங்களது ஆதார் எண் மறந்து விட்டதா? கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தற்போதைய சூழ்நிலையில் ஆதார் எண் முக்கியமாக இருந்து வரும் நிலையில் ஆதார் எண் மறந்தால் கண்டுபிடிப்பது குறித்த வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதார் எண்:

இன்றைய கால கட்டத்தில் ஆதார் கார்டு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அதை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – PIB எச்சரிக்கை!

ஆதார் அட்டையில் ஆதார் எண் அல்லது UID எனப்படும் தனித்துவமான 12 இலக்க சீரற்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில் அந்த எண் மறந்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி பயன்படுத்தி கண்டறிய முடியும். ஆன்லைனில் ஆதார் எண் அல்லது யுஐடியைக் கண்டுபிடிப்பதற்கு https://resident.uidai.gov.in/ எனும் இணையதளத்தை திறக்க வேண்டும். அதனை தொடர்ந்து My Aadhaar பட்டனை கிளிக் செய்து பின் ஆதார் சேவை பிரிவை கண்டறிய வேண்டும்.

செப்.22ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!

பின்பு, இழந்த அல்லது மறக்கப்பட்ட EID/UID ஐ மீட்டெடு என்பதை கிளிக் செய்து பெறப்பட்ட OTP மற்றும் கேப்ட்சா டைப் செய்து உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த மின்னஞ்சல் ஐடியில் உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு ஐடி கிடைக்கும். அடுத்த பக்கத்தில் ஆதார் எண் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது இமெயில் ஐடியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்கள் முழு பெயரை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!