யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் மாதம் ரூ.7.4 லட்சம் சம்பாத்தியம் – அரிய வாய்ப்பு!

0
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் மாதம் ரூ.7.4 லட்சம் சம்பாத்தியம் - அரிய வாய்ப்பு!
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் மாதம் ரூ.7.4 லட்சம் சம்பாத்தியம் - அரிய வாய்ப்பு!
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் மாதம் ரூ.7.4 லட்சம் சம்பாத்தியம் – அரிய வாய்ப்பு!

உலகளவில் முன்னணி இடத்தை வகிக்கும் ஆன்லைன் தலமான யூடியூப் செயலியில் தினசரி பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகின்றன. அந்த வகையில் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் இனி மாதம் ரூ.7.4 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒரு அரிய வாய்ப்பை அந்நிறுவனம் அளித்துள்ளது.

யூடியூப் ஷார்ட்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக ஊடக தளமாக யூடியூப், கடந்த பிப்ரவரி 2005 ஆண்டு ஸ்டீவ் சென், சாட் ஹர்லி மற்றும் ஜாவேட் கரீம் என்பவர்களால் தொடங்கப்பட்டது. இந்த ஆன்லைன் தளம் படிப்படியாக உயர்ந்து வந்து தற்போது கூகுளுக்கு பிறகு, உலக மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளமாக திகழ்கிறது. அந்த வகையில் இந்த செயலி ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணி நேரத்திற்கும் அதிகமான வீடியோக்களைப் மக்கள் பார்வையிடுகிறார்கள் என தரவுகள் கூறுகிறது.

ஆகஸ்ட் 8 வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்நிலையில் இந்த யூடியூப் செயலியில் ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி அதை பகிரும் படைப்பாளர்களுக்கு அந்நிறுவனம் மாதம் 7.4 லட்சம் வரை தொகை கொடுக்கிறது என தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆன்லைன் தளமான யூடியூப் நிறுவனம் மாதந்தோறும் படைப்பாளர்களுக்கு பணம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அதாவது யூடியூப் செயலியில் ஷார்ட்ஸ் தயாரிப்பதற்காக படைப்பாளர்களுக்கு மாதம் $ 10,000 வரை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7.41 லட்சம் வரை கொடுக்க உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக யூடியூபில் ஷார்ட்ஸ் படைப்பாளர்களுக்கான நிதி வழங்குவது குறித்து கடந்த மே மாதத்தில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தொகை குறித்த விவரங்களை யூடியூப் நிறுவனம் அப்போது பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர பயனர் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு காரணமாக சீனாவின் தயாரிப்பான குறுகிய வீடியோ பகிர்வு செயலியை இந்திய அரசு தடை செய்தது. இதையடுத்து கூகுளுக்குச் சொந்தமான தளம் இந்தியாவில் யூடியூப் ஷார்ட்ஸை 2020 ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது.

TN Job “FB  Group” Join Now

யூடியூப் ஷார்ட்ஸ்கள் இந்தியாவில் தொடங்கப்பட்ட உடனே, இவை அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகள் இருக்கும் சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடங்கப்பட்டது. அந்த வகையில் யூடியூபில் வீடியோக்களை உருவாக்கியவர்கள், அதனை ஷார்ட்ஸ் வீடியோக்களாக மாற்றி அதனை பகிர்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்ட 10 பிராந்தியங்களில் உள்ள படைப்பாளர்களுக்கு அதாவது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!