மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் – வைகை அணையில் நீர் திறப்பு!

0
மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் - வைகை அணையில் நீர் திறப்பு!

மதுரை சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா:

ஆண்டுதோறும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி நிகழ்வுகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மதுரை அழகர் கோயில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

IOB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

இதற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் கொள்ளளவு 60 அடியாக உள்ளதால் தண்ணீர் திறப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!