IPL 2021 : வாஷிங்டன் சுந்தர் விலகல் – புதிய வீரரை தேர்வு செய்த RCB அணி!
ஐபிஎல் 2021 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய வீரரை தேர்வு செய்துள்ளது.
IPL அப்டேட்:
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 சீசன் போட்டிகள் கொரோனா தொற்று அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்.19ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் கொரோனா அச்சம், காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களின் விளைவாக பல முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். இதனால் அணி நிர்வாகங்கள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பின்னி – உலக சாதனை பவுலிங்கிற்கு சொந்தக்காரர்!
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக ஐபிஎல் 2021-ல் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று அணி நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் அவரது விரலில் ஏற்பட்ட காயத்தால் என்சிஏ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. இதனால் கடந்த காலங்களில் விளையாடிய மேற்குவங்க பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், மாற்று வீரராக களமிறக்கப்பட உள்ளார்.
TN Job “FB
Group” Join Now
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியுடன் இங்கிலாந்துக்குச் சென்றார். ஆனால் பார்வையாளர்களுக்கான பயிற்சி விளையாட்டில் களமிறங்கிய போது அவரது விரலில் காயம் ஏற்பட்டு நாடு திரும்பினார். 21 வயதான அவர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் & பேட்ஸ்மேன் ஆக தனது பங்கை சிறப்பாக நிறைவேற்றி வந்தார். தற்போது அவர் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.