சென்னை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதிவு – அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க புதிய மிஷின்!

0
சென்னை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதிவு - அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க புதிய மிஷின்!
சென்னை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதிவு - அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க புதிய மிஷின்!சென்னை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதிவு - அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க புதிய மிஷின்!
சென்னை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதிவு – அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க புதிய மிஷின்!

சென்னையில் வாகனங்களில் செல்பவர்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிரமாக விழிப்புணர்வு செய்து கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகிறார்கள்.

புதிய மிஷின்:

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நேற்று முன்தினம் (ஜூன்27) முதல் வரும் 3ஆம் தேதி வரை ‘ஒலி மாசு விழிப்புணர்வு வாரம்’ தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, வாகனங்களில் தேவையற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக ஹாரன் ஒலிப்புவதால் ஏற்படும் ஒலி மாசு குறித்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை சென்னை அசோக் பில்லர் சிக்னல் அருகில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். மேலும் அவர், ஒலிபெருக்கி விழிப்புணர்வு லோகோ மற்றும் விழிப்புணர்வு காணொளியையும் வெளியிட்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய சங்கர் ஜிவால், “சென்னை மாநகரைப் பொறுத்தவரை சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் அதிக ஒலி தரக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்துகிறார்கள். எனவே, அவற்றை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். மேலும், ஒலி மாசு தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குகளை அதிகளவில் பதியவில்லை.

Exams Daily Mobile App Download

இனிமேல் அதிக வழக்கு போடாமல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து ஒலி மாசு கண்டறிவதற்காக நவீன கருவி வாங்க உள்ளோம். தற்போது அதிக ஹாரன் ஒலி எழுப்பினால் ரூ. 100 அபராதம் விதித்து வருகிறோம். மேலும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தால் ரூ.1,000, ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சில முக்கிய பகுதிகளில் ஒலி மாசு ஏற்படுத்தக்கூடாது என்பது தொடர்பான நடைமுறை இருக்கிறது. இருப்பினும், மருத்துவமனைகள், பள்ளிகள் அருகில் அதிக ஹாரன்களை எழுப்பக்கூடாது என்பது விதிமுறை, இதை பலர் பின்பற்றுவது இல்லை.

மேலும் அதிக ஹாரன் எழுப்பி ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய நவீன கருவி, வாங்கிய பிறகு அபராதம் விதிக்க உள்ளோம். இதையடுத்து அதிக ஹாரன்களை பொருத்தி வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், இது போன்ற அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை தயாரித்து வாகனங்களில் பொருத்தி தரும் மெக்கானிக்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். ஹாரன், சைலன்சர் ஆகியவற்றால் ஒலி மாசு எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதனை ஆய்வு செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here