தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சியான அறிவிப்பை மட்டும் அளித்து வந்த அரசு தற்போது எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி துணை உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இரண்டாம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதையும் மீறி ஊழியர் 2வது திருமணம் செய்து கொண்டால் கடுமையான தண்டனை எடுக்கப்படும் என அரசால் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

எச்சரிக்கை அறிவிப்பு:

தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை பொதுமக்களுக்கு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். அவர்களை போற்றும் விதமாக தமிழகத்தில் பல்வேறு வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இருப்பினும் அரசு வேலைகளில் எந்த ஒரு இடையூறு இல்லாமல் நடைபெற அரசு ஊழியர்கள் தன்னலம் பாராமல் உழைத்தனர். அவர்கள் நலன் கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும் இந்நிலையில் தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அரசாணையில் தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு 1973ம் ஆண்டு அரசுப்பணியாளர் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர். இந்த 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோபியை அடித்த ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அவ்வாறு 2வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு, மேலும் அரசு ஊழியர் 2வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!