தமிழகத்தில் LPG சிலிண்டர் வாங்குவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – விலை பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் LPG சிலிண்டர் வாங்குவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு - விலை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் LPG சிலிண்டர் வாங்குவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு - விலை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் LPG சிலிண்டர் வாங்குவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – விலை பட்டியல் வெளியீடு!

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டது, தொடர்ந்து சிலிண்டர் விலையும் உயர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில், ஜூலை மாதத்துக்கான சிலிண்டர் விலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

விலை பட்டியல்:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் மாற்றி அமைப்பது வழக்கம். இருப்பினும் விலை குறைவு என்பது பெரும்பாலும் இருக்காது. ஒவ்வொரு மாதமும் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. ஆனால் இந்த மாதம் சற்று குறைந்து உள்ளது. அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதி அதாவது நேற்று முதல் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 198 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றத்தின் படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2186 ஆக உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் உள்ளது. சில ஏஜென்சிகள் (டெலிவரி மேன்) நிர்ணயித்த விலையை விட வாடிக்கையாளர்களிடம் அதிகம் பணம் வாங்குவதாகப் புகார்கள் உள்ளன. எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் அரியலூர் – ரூ.1040.5 , சென்னை – ரூ.1018.5 , கோவை – ரூ.1032 , கடலூர் – ரூ.1039, தர்மபுரி – ரூ.1041 திண்டுக்கல் – ரூ.1041 , ஈரோடு – ரூ.1041, காஞ்சிபுரம் – ரூ.1045, கரூர் – ரூ.1045, மதுரை – ரூ.1087, நாகப்பட்டினம் – ரூ.1024, நாகர்கோவில் – ரூ.1045, நாமக்கல் – ரூ.1049.5, ஊட்டி – ரூ.1049.5, பெரம்பலூர் – ரூ.1058.5, புதுக்கோட்டை – ரூ.1049, ராமநாதபுரம் – ரூ.1052.5, சேலம் – ரூ.1052.5, சிவகங்கை – ரூ.1058, தஞ்சாவூர் – ரூ.1060.5, தேனி – ரூ.1060.5, திருவள்ளூர் – ரூ.1018.5, திருச்சிராப்பள்ளி – ரூ.1039, திருநெல்வேலி – ரூ.1049, திருப்பூர் – ரூ.1040.5, திருவண்ணாமலை – ரூ.1018.5, திருவாரூர் – ரூ.1039, வேலூர் – ரூ.1067, விழுப்புரம் – ரூ.1020, விருதுநகர் – ரூ.1044 ஆகும்.

IRCTC இணையதளத்தில் புதிய அம்சம் அறிமுகம் – ரயில் பயணிகளுக்கான அசத்தல் அறிவிப்பு!

தமிழகத்திலேயே சிலிண்டர் விலை கம்மியாக உள்ள ஊர் திருவள்ளூர் தான். அங்கு சிலிண்டர் விலை – ரூ.1018.5.

விலை அதிகமாக ஊள்ள ஊர் மதுரை – ரூ.1087

தமிழகத்தின் சராசரி சிலிண்டர் விலை – ரூ.1044.17

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!