அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!

மத்திய அரசு இலவச ரேஷன் பொருட்கள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் கார்டுதாரர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். தகுதியற்றவர்கள் பயன் பெற முடியாது.

புதிய விதிமுறை:

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதுமட்டுமல்லாமல், அரசின் நிதியுதவி போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ரேஷன் கார்டு விதிமுறைப்படி, எந்த மாதத்தில் குடும்ப அட்டைதாரர் ரேஷன் வாங்கினார், அவர் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் போன்ற அனைத்து தகவல்களும் ரேஷன் கார்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப காலமாக ரேஷன் கடைகளில் நடைபெறும் சில மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர், அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதாவது ரேஷன் கார்டுதாரர் ஆறு மாதங்களாக ரேஷன் வாங்காமல் இருந்தால், அவருக்கு மலிவு விலையில் கிடைக்கும் உணவு தானியங்கள் தேவையில்லை எனவோ, ரேஷன் வாங்க அவருக்குத் தகுதி இல்லை எனவோ விதிமுறைப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்? அரசு மறுப்பு!

இதுபோன்ற சூழ்நிலையில் ஆறு மாதங்களாக ரேஷன் வாங்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை. ரேஷன் பொருட்களே தேவைப்படாத குடும்பங்களும் வெறுமனே ரேஷன் கார்டு வைத்திருப்பார்கள், அதனால் சாமானிய மக்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகிறது. இதனால் அவர்கள் பெருமளவில் பாதிப்படைகின்றனர். மேலும் சிலர் ரேஷன் பொருட்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என புகார் எழுந்து உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த புதிய விதிமுறை வகுக்கப்படுகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here