இந்த 4 செயலிகளை பயன்படுத்துபவர்களா நீங்கள்? SBI வங்கி எச்சரிக்கை!

0
இந்த 4 செயலிகளை பயன்படுத்துபவர்களா நீங்கள்? SBI வங்கி எச்சரிக்கை!
இந்த 4 செயலிகளை பயன்படுத்துபவர்களா நீங்கள்? SBI வங்கி எச்சரிக்கை!
இந்த 4 செயலிகளை பயன்படுத்துபவர்களா நீங்கள்? SBI வங்கி எச்சரிக்கை!

வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இணையதள மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் விதத்தில் குறிப்பிட்ட 4 செயலிகளை உபயோகிக்க வேண்டாம் என SBI வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மோசடி எச்சரிக்கை

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சில அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது. அதாவது ஆன்லைன் மோசடி, பிஷிங் போன்ற இணையதள திருட்டுகளில் இருந்து தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் விதத்தில் சில முக்கிய வழிமுறைகளை SBI வங்கி நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மற்றுமொரு மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள SBI வங்கி, ஒரு குறிப்பிட்ட நான்கு செயலிகளைப் பயன்படுத்துவது ஆபத்து என குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை 2021 – செப்டம்பர் 8 முதல் துவக்கம்!

இதன் மூலம் வங்கிக் கணக்குகளை முடக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் இவ்வகை செயலிகளை பயன்படுத்தியதால் கடந்த நான்கு மாதங்களில், SBI வாடிக்கையாளர்கள் 150 பேர் 70 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர். அதனால் Any desk, Quick Support, Team viewer and Mingle view போன்ற செயலிகளை எந்த சூழ்நிலையிலும் உபயோகிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. கூடுதலாக, UPI பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தெரியாத மூலத்திலிருந்து UPI சேகரிப்பு கோரிக்கை அல்லது QR குறியீட்டை ஏற்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை SWAB Test – ஆட்சியர் உத்தரவு!

மேலும் SBI வங்கியின் ஹெல்ப்லைன் அல்லது வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை தேடும்போது தெரியாத வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. SBI வங்கியின் பெயரில் பல போலி இணையதளங்கள் உலவுவதால் எந்தவொரு தீர்விற்கும், வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசடி ஏற்பட்டது தெரிந்தால் SBI வாடிக்கையாளர்கள் 1800111109, 9449112211 மற்றும் 08026599990 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், 155260 என்ற எண் மூலம் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்ட்டலில் புகார் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!