தமிழகத்தில் டிச.19 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் டிச.19 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் டிச.19 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் டிச.19 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

வடகிழக்கு பருவ காற்றின்‌ காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 19ம் தேதி வரை இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

15.12.2021,: டெல்டா மாவட்டங்கள்‌, காரைக்கால்‌, புதுக்கோட்டை மற்றும்‌ அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிவயையும்‌, ஓரிரு இடங்களில்‌ இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

16.12.2021 முதல்‌ 19.12.2021 வரை: தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வடமாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌

கல்லூரி மாணவர்களுக்கு TCS நிறுவனத்தில் பணிவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.
அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சயஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

15.12.2011 ,19.12.2021: குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

15.12.2021,16.12.2021: இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகை ஓட்டிய பகுதிகளில்‌ சூறாவளி காற்று மனிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இப்பகுதிகளுக்கு செல்லும்‌ மீனவர்கள்‌ எச்சரிகையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அதி வேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று, பெரும்பாலான நாடுகளில் ஆதிக்கம் – WHO எச்சரிக்கை!

குறிப்பு: வரும்‌ 17 ஆம்‌ தேதி தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பூமத்தய ரேகை பகுதியில்‌ ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன்‌ காரணமாக

17.12.2021 முதல்‌ 19.12.2021 வரை: தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ . மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!