தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – போக்குவரத்துத்துறை!

0
தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - போக்குவரத்துத்துறை!
தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - போக்குவரத்துத்துறை!
தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – போக்குவரத்துத்துறை!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளை சாலையின் வலது புறம் நிறுத்தினால் ஓட்டுநர் & நடத்துனர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அனைத்து கூட்ட நெரிசல் நிறைந்த சாலைகளிலும் எப்போதும் ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி பணியில் உள்ளார். சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகிறார். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்விதியை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் RTE திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு – 419.5 கோடி ஒதுக்கீடு!

அதிக வாகனங்கள் செல்ல கூடிய முக்கிய 4 வழி சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து இடையூறு இன்றி எளிமையாக்கபட்டுள்ளது. சாலையின் நடுவே தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டு வாகன ஓட்டிகள் வசதிக்காக மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் சாலை விபத்துகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் விபத்துகளை குறைக்கும் முயற்சியாக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு குறித்து சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதம் முழுவதும் சபரிமலை செல்ல தடை – தேவசம் போர்டு அறிவிப்பு!

அதாவது அரசு விரைவுப் பேருந்துகள் பயணம் & உணவு நேரத்திற்கு பேருந்துகளை நிறுத்தும் போது பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில் தான் நிறுத்த வேண்டும். இடதுபுறம் நிறுத்தாமல் எதிர் திசையில் உள்ள உணவகத்திற்கு வாகனத்தை திருப்பும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயம் பேருந்துகளை இடதுபுறம் உள்ள உணவகத்தில் தான் நிறுத்த வேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here